குரு பெயர்ச்சி பலன் 2024: சித்திரை முதல் சிறப்பான சம்பவங்கள்.. 2 ராசிக்காரர்களுக்கு அதிரடி சரவெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ஆம் ஆண்டு சில நாட்களில் முடியப்போகிறது. 2024ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டில் நவ கிரங்களில் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை. குரு பெயர்ச்சி மட்டுமே சித்திரை மாதம் நிகழப்போகிறது. சித்திரை முதல் யாருடைய வாழ்க்கையில் சிறப்பான சம்பவங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் வரும் சித்திரை மாதம் முதல் குடும்பம், பணம், கண்கள், வாக்கு, நாணயம், ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். பாக்ய ஸ்தான அதிபதி, விரைய ஸ்தான அதிபதி குரு தனஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பண வருமானம் அதிகரிக்கும். அதே போல சுப செலவுகள் கூடும் அதே போல வருமானமும் வந்து கொண்டே இருக்கும்.

Guru peyarchi palan 2024: Jupiter Transit prediction for Mesham and Rishabam

குரு பகவானின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளின் மீது விழுவதால் இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும். வாக்கு ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போவதால் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். புது முயற்சிகள் கைகூடும்.

வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடலும் மனமும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் வரப்போகிறது. இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் இட மாற்றமும் வரும். சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. பிரதோச வழிபாடு பிரச்சினைகளை தீர்க்கும்.

ரிஷபம்: உங்கள் ராசிக்கு 12 ஆம் பாவத்தில் பயணம் செய்யும் குருபகவான் ஓருவரின் புகழ், கௌரவம், அந்தஸ்து, தேகபலம், ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். 'ஜென்ம ராமர் வனத்திலே' என்பது பாடல். ஜென்ம ராசி என்பது ஒருவருக்கு புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர். லாப ஸ்தான அதிபதி, அஷ்டம ஸ்தான அதிபதி குரு பகவான் உங்கள் ராசிக்கு வரும் பொழுது புது முயற்சிகள் கைகூடும். சித்திரை மாதம் முதல் நீங்கள் தொட்டது துலங்கும்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை இனி மாறப்போகிறது. கடந்த காலங்களில் நிறைய தடைகளை சந்தித்து இருப்பீர்கள். செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. இனி குரு பகவான் உங்களுக்கு சாதகமான நிலையில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசியில் இருந்து 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் மீது விழப்போவதால் அந்த ஸ்தானங்கள் வலுவடைய போகிறது.

ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர் பதவி கிடைக்கும். உங்களுடைய குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும். உங்களின் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால் வெற்றிகள் தேடி வரும். கூட்டு தொழில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடைபெறும்.

ஜென்ம ராசிக்குள் குரு வந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பது நல்லது. 9 ஆம் வீட்டை குரு பார்வையிடுவதால் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. சித்திரை மாதத்திற்கு பிறகு குரு பெயர்ச்சியால் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+