Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: கவலைகள் மாறும்.. நிம்மதியும் சந்தோஷமும் தரும் குரு பகவான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ஆம் ஆண்டு சில நாட்களில் முடியப்போகிறது. 2024ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டில் நவ கிரங்களில் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை. குரு பெயர்ச்சி மட்டுமே சித்திரை மாதம் நிகழப்போகிறது. சித்திரை மாதம் முதல் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குரு பகவான் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறார் என்று பார்க்கலாம்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருபகவான் சித்திரை மாதம் முதல் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு, கர்மா ஸ்தானம், என்ற இடத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு கோசாரத்தில் பத்தில் வந்தால் பதவி பறிபோகும் என்று சொல்வார்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பதவி யோகத்தை அதிகார யோகத்தை தரப்போகிறார். நல்ல வேலை வாய்ப்பு அமையும் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

Guru peyarchi palan 2024: jupiter transit Prediction for Simmam and Kanni

குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6, ஆகிய ஸ்தானங்களின் மீது விழுகிறது. குடும்ப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடலாம். பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சண்டை போட்டு பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும்.

குரு பகவான் தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார், வீடு, வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வரும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக குரு உங்கள் ராசிக்கு ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும். வியாபாரம் தொழில் வளர்ச்சி பெறும். சிவன்கோயிலில் உள்ள தெட்சிணாமுர்த்தி,மற்றும் நவகிரக சன்னிதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசிப்பது நல்லது.

கன்னி: உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் சித்திரை மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை, தீர்த்தயாத்திரை, தனம், செல்வம், நிம்மதி, ஓழுக்கம், இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு வருகிறார். பொதுவாக உங்கள் ராசிக்கு 4, 7க்குடையவர் குரு. உங்களுக்கு நல்லதை மட்டுமே குரு செய்வார். ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்கிறார் குரு பகவான். ஜாதகத்தில் ராசி என்பது புகழ், கீர்த்தி, அந்தஸ்து, மதிப்பை தரும் ஸ்தானம்.

ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும். நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும்.

மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். மன அழுத்தம் அச்ச உணர்வு ஆகியவை நீங்கும்.

5ஆம் வீடான பூர்வபூண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசு யோகம் வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.மற்றபடி கவலைபட வேண்டாம். பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும். சனிக்கிழமை குரு வழிபாடு சாதகமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+