குரு பெயர்ச்சி பலன் 2024: குருவின் நட்சத்திர மாற்றம்.. பண மழையில் நனையப்போகும் 6 ராசிக்காரர்கள்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஏப்ரல் 17 முதல் மே 1ஆம் தேதி வரைக்கும் மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதத்தில் பயணம் செய்யப்போகிறார். கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: குருபகவான் தற்போது ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். அங்கிருந்து நேரடியாக உங்களுடைய ராசியை பார்க்கிறார். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். உங்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்வையிடுகிறார். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் நீங்கும். சித்திரை வரைக்கும் குருவின் பயணம் சாதகமாகவே உள்ளது. புது வேலைக்கு இப்போது முயற்சி செய்தாலும் நல்ல வேலை கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். பண வரவு அதிகரிக்கும். வரவேண்டிய கடன் பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.

விருச்சிகம்: சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு குடும்ப ஸ்தான அதிபதியும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியுமான குரு 6 ஆம் வீட்டில் வருவது ஒரு வகையில் நன்மையே. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2 ஆம் இடமான தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். சித்திரை மாதத்திற்குப் பிறகு குரு இடப்பெயர்ச்சியாவதால் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. குரு பகவானின் பார்வையும் பயணமும் குரோதி ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமான நிலையிலேயே உள்ளதால் சந்தோஷங்களை அனுபவிக்கப்போகிறீர்கள்.
தனுசு: குரு பகவான் ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்தில் சித்திரை மாதம் வரை பயணம் செய்கிறார். குரு பகவான் கார்த்திகை நட்சத்திரத்திற்கு இடம் மாறப்போவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சித்திரை மாதத்திற்குப் பிறகு குரு பகவான் ஆறாம் வீட்டிற்கு செல்லப்போவதும் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தை தரப்போகிறது.
மகரம்: சுக ஸ்தானமான ராசிக்கு 4ஆம் வீட்டில் குருபகவான் பயணம் செய்வதுடன் உங்கள் ராசிக்கு 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். நோய்கள் குணமடையும் ஆரோக்கியம் அதிகரிக்கும். குரு பகவான் பத்தாம் பாவத்தை பார்ப்பதால் வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் பதவி உயர்வு பதவியில் முன்னேற்றமும் கிடைக்கும். புது வேலை கிடைக்கலாம். சிலருக்கு சொந்த வீடு வாகனம் அமையும். சித்திரை மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் ராசி மாற்றமும் குருவின் பார்வையும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பதால் உங்களின் நிதி நிலைமையில் அதிரடி மாற்றம் ஏற்படும். பண மழையில் நனையப்போகிறீர்கள்.
கும்பம்: குரு பகவான் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்தில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தினால் பொருளாதார நிலை திருப்தி தரும். தொழில் வளர்ச்சியில் மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். சித்திரைக்குப் பிறகு குருவின் ராசி மாற்றத்தினால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும்.
மீனம்: உங்கள் ராசிநாதன் குரு பகவான் தனஸ்தானத்தில் பயணம் செய்வதால் வருமானம் அதிகரிக்கிறது. இருக்கும். குரு பகவானின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளின் மீது விழுகிறது. வாக்கு ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். பண வருமானம் திருப்தி தரும். புது தொழில்கள் துவங்க சரியான நேரம் வரப்போகிறது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications