Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் கூடி வரும் குரு பலன்.. கல்யாண வைபோகம் யாருக்கு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவானால் சில ராசிக்காரர்களுக்கு குரு பலன் வரப்போகிறது. குரு பலன் கிடைப்பதால் எந்த ராசிக்காரர்களின் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும்? யாருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குருபகவான்: மனிதர்களின் திருமணம், செல்வாக்கு, குழந்தை பாக்கியம் ஆகியவற்றிக்கு காரணகர்த்தாவாக திகழ்வதால் குரு பெயர்ச்சியை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை', குரு பார்வை தோஷ நிவர்த்தி' என்றெல்லாம் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Guru peyarchi Palan 2024 Krodhi Tamil New year Guru palan who will get marriage and Child birth

குருபெயர்ச்சி எப்போது?: குருபகவான் மே 1ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார். காலபுருஷ தத்துவப்படி ராசி மண்டலத்தில் இது இரண்டாம் வீடாகும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு ரிஷப ராசியில் இருந்து தனது 5ஆம் பார்வையால் கன்னி ராசியையும். 7ஆம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்க்கிறார். 9 ஆம் பார்வையால் மகர ராசியையும் பார்வையிடுகிறார்.

மேஷம்: உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்ம குருவாக பயணம் செய்யும் குரு மே மாதம் முதல் குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். நீங்கள் பட்ட கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. நோய்கள் தீரும் காலமும் வந்து விட்டது. உடம்பும் மனதும் புத்துணர்ச்சியடையும். தன ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து குரு உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான கடன் ஸ்தானம், 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானம், 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும்.

ரிஷபம்: ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகிறார். குடும்பத்தில் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கடகம்: குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பான அம்சமாகும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது. குரு பார்வையால் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும்.

கன்னி: மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. அஷ்டம குருவாக பயணம் செய்யும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாக்கிய குருவாக 9ஆம் இடத்தில் அமர்வது சிறப்பானது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3ஆம் வீடு, 5 ஆம் வீடுகளின் மீது குரு பகவானின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஏற்றத்தை தரக்கூடியது. ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும். காதல் வெற்றியடையும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். பாக்கெட் நிறைய பணம் வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: குரு பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரப்போகிறது. குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். குரு பலன் வந்து விட்டதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். கட்டில்கள் ஆடிய வீட்டில் தொட்டில் ஆடும் காலமும் கூடி வருகிறது. வேலையில் உங்களுக்கு புரமோசன் கிடைக்கப்போகிறது. சம்பள உயர்வு இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு மே மாதம் முதல் லட்சுமி கடாட்சம் வரப்போகிறது.

மீனம்: தலைமேல் ராகு அமர்ந்தாலும் உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் மறையப்போகிறார். குரு மறைந்தாலும் அவரது பார்வையானது 11ஆம் வீடான லாப ஸ்தானம். 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது. உங்களுடைய வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கும். காதல் மலரும் காலம் இது. காதல் கனிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. களத்திர ஸ்தானத்தில் உள்ள கேதுவின் மீது குருவின் பார்வை விழுவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+