Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் கோடீஸ்வர யோகம் தரும் குரு பகவான்.. யாருக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரோதி ஆண்டில் குரு பகவான் மே 1ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். பெண்களுக்கு அற்புதமான கால கட்டம். இந்த குரு பெயர்ச்சியால் பலரது மண மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் இருந்தும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குரு முழு சுபர் என்பதால் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி மேஷம்: குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீடான ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். நல்ல வேலை கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். அதிகாரப்பதவி தேடி வரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். திருமணமானவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும். சுப காரியங்கள் நடைபெறும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

Guru peyarchi palan 2024 Krodhi Tamil New year Guru peyarchi palan for Mesham Rasi

குருவின் பார்வை: உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் கடன் பிரச்சினை, நோய்களை நீக்குவதற்கான நல்ல நேரம் கைகூடி வரப்போகிறது. கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். குரு பகவான் சொன்னதை செய்ய வைப்பார். வாக்குப்பலிதம் அதிகரிக்கும். குரு பார்வை 8வது வீட்டில் விழுவதால் வலிகள் நீங்கும். நீங்கள் பட்ட அவமானங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். தீராத நோய்கள் நீங்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மன மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடி வரும்.

கோடீஸ்வர யோகம்: வீடு வாகனம் வாங்கலாம். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். உங்கள் ராசிக்கு 10வது வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். உங்களுக்கு குரு ரிஷப ராசியில் இருக்கும் பட்சத்தில் கோடீஸ்வர யோகத்தை கொட்டிக்கொடுக்கப்போகிறார்.

ஓராண்டு யோக காலம்: 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் ஓராண்டு காலம் ரிஷப ராசியில் பயணம் செய்யும் காலத்தில் பணம் பலவழிகளில் இருந்தும் உங்களுக்கு தேடி வரப்போகிறது. பொதுவாகவே குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்வது குரு வளையம் எனப்படும். தன ஸ்தானம் கால புருஷத்தத்துவத்திற்கு இரண்டாவது வீடு பண வருமானத்தை அதிகரிப்பார்

தங்கத்தில் முதலீடு: கடன் பிரச்சினை நீங்கும். வெளிநாடு பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் புது வரவு இருக்கும். பண வருமானம் அதிகரிக்கும் சேமிப்பும் கூடும். 90 சதவிகிதம் இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். புது வேலைகள் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். செல்வமும் செல்வாக்கும் உயரும். தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். குரு பகவான். பலருக்கும் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார். அன்னதானம் செய்வது அற்புதமான யோகத்தை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+