Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் குபேர யோகம்.. 6 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த குருப்பெயர்ச்சி திடீர் ஜாக்பாட் யாருக்கு அடிக்கப்போகிறது. கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.

துலாம்: அஷ்டமத்து குரு என்பதால் கவனம் தேவை. குருவின் பார்வை 2,4,12 ஆமிடங்களின் மீது விழுகிறது. பாதியிலேயே நின்றுபோன வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் வீடு தேடி வரும். உங்களுக்குக் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். வீடு கட்ட நிலம் வாங்கலாம். சொந்த வீடு வாங்குவீர்கள். வியாழக்கிழமை சிவ ஆலயம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

Guru peyarchi Palan 2024 Rasi palan for 12 zodiac sign Thulam to meenam

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் அமரப்போகும் களத்திர குரு பகவான் உங்களுக்கு நன்மைகளை செய்யப்போகிறார். குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. தைரிய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய இடங்களின் மீது குருவின் பார்வை விழுவதால் வாரிசு இல்லையே என ஏங்கித் தவித்த தம்பதிக்கு அழகான குழந்தை பிறக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும். பிள்ளைகளின் கோபம் தணியும். அவர்களின் வாழ்க்கைத் தரம், வசதி, வாய்ப்புகள் உயரும். பட்டமங்கலம் சென்று குரு தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு: ஆறாம் வீட்டில் அமரப்போகும் ருண ரோக சத்ரு ஸ்தான குருவினால் உங்களுக்கு சின்னச் சின்ன பாதிப்பு வரும். குருவின் பார்வை 2,12,10 ஆமிடங்களில் விழுகிறது. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லாவிட்டால் சின்னச் சின்ன பிரச்சினைகள் எல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பு இருக்கிறது. பண விசயத்தில் யாருக்கும் வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்: 5ஆம் வீட்டில் அமரப்போகும் பூர்வ புண்ணிய குருவால் அதிர்ஷ்டம் வரும். குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 9,11 ஆமிடங்களின் மீதும் குருவின் பார்வை விழுகிறது. கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வியாழக்கிழமையன்று முறப்பநாடு குரு பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்: 4ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகும் சுக ஸ்தான குருவினால் நன்மை அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை 12,10,8 ஆகிய இடங்களின் மீது விழுகிறது.வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிய வேண்டி வரும். உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் பெரிய முதலீடுகள் வேண்டாம். வியாழக்கிழமை குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்: தைரிய ஸ்தான குரு பட்டையை கிளப்பும். பதவி உயர்வு தேடி வரும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 11,9,7 ஆகிய இடங்களின் மீது விழுகிறது. கணவன்-மனைவிக்கு இடையே அன்பும், அந்நியோன்யமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. குருவின் பார்வை எதையும் தைரியமாக முடிவெடுக்கும் சக்தியைத் தரும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தியை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+