சிம்பிளா இதுதான் நடக்கும்.. குரு பெயர்ச்சி பலன்.. 12 ராசிகளுக்கான எதிர்காலம் ஒரே வரியில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மூலம் 12 ராசிகளுக்கு நடக்க போகும் பலன்களை ஒரே வரியில் இங்கே பார்க்கலாம்.

2024 மே 1 குரு பெயர்ச்சி அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குரு பெயர்ச்சிக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லை. தேர்வு தொடங்கி தேர்தல் வாரியாக நடப்பதால்.. மக்கள் பலரும் இந்த பெயர்ச்சியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

Guru peyarchi palan 2024 Single line prediction for all 12 Rashi-Rasi

ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. குடிசையில் இருப்பவன் கோட்டைக்கு சென்றுவிட்டான் என்று சொல்வார்களே.. அப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சி மூலம் மாறி இருக்கிறது.

அப்படித்தான் பல ராசிதாரர்களின் வாழ்க்கை இந்த குரு பெயர்ச்சி மூலம் மாறப்போகிறது. மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் உங்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.

2024 மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மூலம் 12 ராசிகளுக்கு நடக்க போகும் பலன்களை ஒரே வரியில் இங்கே பார்க்கலாம்.

மேஷம்: இத்தனை காலம் பட்ட கஷ்டம், துன்பம் எல்லாம் போய் நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்கும், இழந்ததை எல்லாம் மீட்கும் நல்ல காலம் வரப்போகிறது.

ரிஷபம்; உங்கள் ராசிக்கு வரப்போகும் குரு கடந்த ஒரு வருடமாக நீங்கள் பட்ட கஷ்டங்களை தீர்த்து புதிய வாழ்க்கையை கொடுப்பார்.

மிதுனம்: நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும், விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்

கடகம்: பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு, உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும், இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது.

சிம்மம்: உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள், லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு.

கன்னி: உங்கள் வாழ்க்கையே மாறப்போகிறது, அதிர்ச்சிக்காரர்களா ஆகப்போகிறீர்கள்.. நீங்கள் தொட்டத்தில எல்லாம் குபேர அதிர்ஷ்டம் அடிக்கும்.

துலாம்: வேலையில் முன்னேற்றம் வரும், உடல் நலனில் அக்கறை காட்டவும், வெளிநாடு போகும் வாய்ப்புகள் வரும்.

விருச்சிகம்: விருச்சிகம் அடித்து தூள் கிளப்பும், வீடு கட்டலாம், நிலம் வாங்கலாம், தங்கம் வாங்கும் வாய்ப்பு வரும்.

தனுஷ்: அகலக்கால் வைக்க வேண்டாம், நில விஷயங்கள் கவனமாக இருங்கள், முதலீடுகளை பார்த்து செய்யுங்கள்.

மகரம்: குரு பெயர்ச்சி உங்களுக்கு அவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுக்காது, எடுக்க போகும் முடிவுகளை கவனமாக எடுங்கள்.

கும்பம்; உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள், பேசுவதில் கவனமாக பேசுங்கள், வேலை வாய்ப்பில் அசத்தல் மாற்றம் வரப்போகிறது.

மீனம்: 5 வருடங்களாக உங்களுக்கு இருந்த மண வாழ்க்கை பிரச்சனை, திருமண வாழ்க்கை பிரச்சனை எல்லாம் சரியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+