குரு பெயர்ச்சி பலன் 2024: பரணியில் பயணம் செய்யும் குரு... சுக்கிர யோகத்தால் 6 ராசிக்காரர்களுக்கு லக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். பிப்ரவரி முதல் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். குருவின் நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் எதிர்பாராத மாற்றங்களையும் தரப்போகிறது. பரணி செல்லும் குருவினால் எந்த ராசிக்காரர்கள் பண மழையில் நனையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு பகவான் உங்கள் ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் பணம் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை தேடி வரும். புதிய வேலை வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Guru peyarchi palan 2024 tamil: Guru travel from Aswini to Bharni Star Who will get luck

ரிஷபம்: விரைய ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சுப காரியங்கள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வருமானத்தை சேமித்து பத்திரப்படுத்துங்கள்.

மிதுனம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் நட்சத்திரம் மாறுவதால் திருமண சுபகாரியம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட தேவதையின் பார்வையால் பண மழையில் நனைவீர்கள்.

கடகம்: தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் வேலையில் முன்னேற்ற உண்டாகும். சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதிலும் உங்களின் பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதிலும் கவனம் தேவைப்படும். வேலை செய்யுமிடத்தில் கவனம் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

சிம்மம்: குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும். குரு பார்வையால் மறைமுக எதிரிகளை கண்டறிந்து வீழ்த்துவீர்கள், எதிலும் வெற்றிகள் தேடி வரும். திருமணம் சுப காரியம் கைகூடிவரும். வேலையில் அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். வேலையில் இடமாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும்.

கன்னி: அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசிக்கு தனபாக்யாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் வெற்றிகள் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீண் செலவுகளை தவிர்க்கவும்.

துலாம்: உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். குரு பகவான் பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. உங்கள் ராசிநாதன் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போவதால் உங்களுக்கு திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். தொட்டது துலங்கும் காரிய வெற்றிகள் உண்டாகும். நோய்கள் நீங்கும் மனதில் ஏற்பட்ட காயங்கள் ஆறும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆன்மீக பயணம் சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள்.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான், பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் கால கட்டத்தில் பண மழையில் நனைவீர்கள். பெண்களுக்கு பொன்னான காலம் பொன்நகைகள் சேரும் காலம் வந்து விட்டது. கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். வீடு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். திருமண சுப காரியம் கைகூடி வரும்.

தனுசு: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் நட்சத்திரம் மாறப்போகிறார். சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பயணம் செய்தாலும் பார்வையால் நிறைய பலன்களை தருவார். புது வீடு மாறுவீர்கள். நினைத்தது நிறைவேறும் சவால்களை எளிதில் வென்று சாதித்து காட்டுவீர்கள்.

மகரம்: குருபகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த ஆண்டு முழுவதுமே உங்களுக்கு பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் வந்து பாக்கெட்டில் பணத்தை நிரப்பும். புது வீடு மாற்றம் உண்டாகும். வசதியான வீட்டிற்கு குடி செல்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கைகூடி வரும். அதிர்ஷ்ட காற்று உங்களை நோக்கி வீசப்போகிறது.

கும்பம்: குரு பகவான் உங்களுக்கு யோகத்தை தரக்கூடியவர். பிப்ரவரி முதல் உங்களுக்கு பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். கொடுத்து ஏமாந்து போய் வரவே வராது என்று நினைத்த பணம் கூட கைக்கு வரும். புது வீட்டிற்கு மாறுவீர்கள். பெண்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். எந்த சூழ்நிலையிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். பணத்தை பெரிய அளவில் முதலீடு செய்யாதீர்கள். பங்குச்சந்தை சூதாட்டம் தேவையில்லை.

மீனம்: உங்கள் ராசி நாதன் குரு பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பரணியில் பயணம் செய்யும் போது செல்வத்தையும், புகழையும் செல்வாக்கையும் தேடி தரப்போகிறார். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். இளைய சகோதரர்களின் உதவிகள் தேடி வரும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+