Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரு பலன் வந்திருச்சா? சித்திரை முதல் சிறப்பான யோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் ரிஷப ராசிக்கு மே 1ஆம் தேதி முதல் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு வரும் குரு பகவான் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். குருபகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பகவானின் பார்வையாலும் குரு பயணம் செய்வதை பொருத்தும் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு: உங்கள்ராசி நாதன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் இருந்து ஆறாம் வீட்டிற்கு பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வையானது உங்களுடைய ராசிக்கு 10,12,2ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உங்களின் பெயர் புகழ், வளர்ச்சி அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கலாம். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உங்களுடைய நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பண வருமானம் அதிகரிக்கும்.

Guru peyarchi palan 2024 tamil: Jupiter transit prediction for Dhanusu to Meenam

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறப்போகும் குரு பகவான் நிறைய நன்மைகளை செய்யப்போகிறார். குரு பகவானின் ஒன்பதாம் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைக்கப்போவதால் வேலையில் புரமோஷன் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை, கவுரவம் அந்தஸ்து உயரும். ஒளிமயமான எதிர்காலம் உங்களை தேடி வரப்போகிறது. உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கும்பம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். சுக ஸ்தான குரு பகவானின் பார்வையானது 12,10,8ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உங்களுடைய குடும்பத்தின் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் விடியல் தேடிப் வரப்போகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். அரசு தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்: குரு பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் சித்திரை மாதம் முதல் பயணம் செய்யப்போகிறார். உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சில நேரங்களில் லாபம் கிடைக்கும். ஏழரை சனி காலமாக இருப்பதால் பண முதலீடுகளில் கவனம் தேவை. கிரகங்கள் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் இறைவன் அருளால் நன்மைகள் நடைபெறும்.

Guru peyarchi palan 2024 tamil: Jupiter transit prediction for Dhanusu to Meenam ( குரு பெயர்ச்சி பலன் 2024 தமிழ் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+