குரு பெயர்ச்சி பலன் 2024: குரு பார்வை.. பலனடையும் ராசிக்காரர்கள்.. தேடி வரும் குபேர யோகம்
சென்னை: சித்திரை மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே 1ஆம் தேதி முதல் இடப்பெயர்ச்சி அடைகிறா. குரு பகவான் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். குரு பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பகவானின் பார்வையாலும் குரு பயணம் செய்வதை பொருத்தும் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். தொழில் குரு, வியாபாரத்தில் வெற்றிகளை தேடித்தரப்போகிறார். வேலை, தொழிலில் இருந்த சங்கடங்கள் நீங்கும். இந்த கால கட்டத்தில் புதிய தொடங்காதீர்கள். பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.

கன்னி: உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குரு பார்வை உங்களுக்கு கிடைப்பதால் குரு பலன் வந்து விட்டது. அற்புதமான யோக கால கட்டம். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்ற சொல்வார்கள். ஒன்பதாம் இட குரு நிறைய லாபத்தையும் நன்மைகளையும் தருவார். உங்களின் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் பல வழிகளில் இருந்தும் வரப்போகிறது.
துலாம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரப்போகிறது. குருவின் பயணம், பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது. குரு பார்வை 12,2,4ஆம் வீடுகளின் மீது விழுவதால் பண வருமானமும் அதனால் சுப செலவுகளும் அதிகரிக்கும். குரு பகவான் பார்வை உங்கள் ராசியை விட்டு விலகினாலும் கவலை வேண்டாம் உங்களின் உழைப்புக்கு ஏற்ப வருமானமும் வெற்றியும் தேடி வரப்போகிறது.
விருச்சிகம்: குரு பகவான் வரும் மே மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுவார். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அதிக பண வருமானம் வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும். நல்ல வாழ்க்கை துணை தேடி வரும். வேலையை இழந்து தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற நல்ல புரமோஷனும் கிடைக்கும்.
-
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications