குரு பெயர்ச்சி பலன் 2024: சனி பார்வையில் குரு.. 4 மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டியது யார்?
சென்னை: குரு பயணம் செய்யும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவானை சனி பார்வையிடுகிறார். சனி குரு கூட்டணியால் நான்கு மாதங்களுக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்: ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதிய முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டாலும் குரு பார்வையால் சீக்கிரம் சரியாகி விடும். சனியின் பார்வையில் குரு இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். குருவின் பார்வை 5,7,9ஆம் இடங்களின் மீது விழுவதால் அற்புதமான யோகத்தை தரப்போகிறது. பணம் பல வழிகளிலும் வரும்.

ரிஷபம்: விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது மருத்துவ செலவுகள் ஏற்படும். குருவின் சுப பார்வை ராசிக்கு நான்கு, ஆறு, எட்டு, யால் நோய்கள் தீரும் கடன்கள் அடைபடும் கண்டங்கள் விலகும். வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் பாதிப்புகள் நீங்கும்.
மிதுனம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு தைரிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாழக்கிழமை விரதம் விஸ்வரூப வெற்றியை தேடித்தரும்.
கடகம்: உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு பயணம் செய்கிறார். குருவின் பார்வையால் பணம் தாராளமாக வரும். அதே நேரத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாமல் போகும். தொழிலில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும்.
சிம்மம்: ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள். குரு பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். பாக்ய ஸ்தான குருவினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குரு பகவான் உங்க ராசியின் மீது விழுவதோடு மட்டுமல்லாது ராசிக்கு முன்று ஐந்தாம் வீடுகளின் மீது விழுகிறது. தைரியம் தன்னம்பிக்கை கூடும்.
கன்னி: அஷ்டம குரு உங்களின் கஷ்டங்களை போக்குவார். சனியின் பார்வையும் குரு மீது விழுவதால் வேலைக்காக வேறு இடம் போக வேண்டாம். இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்ளுங்கள். குரு பார்வையால் பணவருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications