குரு பெயர்ச்சி பலன் 2024: வேலையில் புரமோசன்.. குரு பலனால் தேடி வரும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். மே 1ஆம் தேதி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். குரு பகவான் 2024ஆம் ஆண்டில் யாருடைய வேலையில் புரமோசனும் திடீர் திருப்பங்களும் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு பகவான் தன வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு செல்லப்போவதால் பண வருமானம் பல வழிகளிலும் வரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். பேசும் வார்த்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும். நரசிம்மர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

Guru peyarchi palan 2024 Tamil: Who will get new Job,promotion good salary

கடகம்: குரு பகவான் உங்களுக்கு ராஜ யோகத்தை தரப்போகிறார். லாப வீட்டில் அமரப்போகும் குரு பகவான் புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து வர வெற்றி மீது வெற்றி தேடி வரும்.

சிம்மம்: பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். பத்தில் குரு சில நேரங்களில் பதவிக்கு வேட்டு வைப்பார். வேலை செய்பவர்கள் கவனம், திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கவும்.

கன்னி: ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். நவகிரக குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்: ஏழாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் உங்கள் ராசியை பார்க்கிறார். தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். இந்த ஆண்டில் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் நிச்சயம் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.

மகரம்: குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குரு பார்வையால் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கும்பம்: மறைந்திருந்த குரு பகவான் நான்காம் வீட்டிற்கு செல்லப்போவதால் வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெற்றிகள் தேடி வரும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். திருவண்ணாமலை சென்று கிரிவலம் வாருங்கள் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+