நீங்க எதிர்பார்த்த "அந்த" ஒரு விஷயம் நடக்க போகுது.. இந்த ராசியை புரட்டி போட போகும் குரு பெயர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன ராசிக்காரர்களின் ராசிபகவான், குருபகவான் மே 1ம் தேதி உங்களின் மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார்.

ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பங்கள் நடந்துள்ளன. குடிசையில் இருப்பவன் கோட்டைக்கு சென்றுவிட்டான் என்று சொல்வார்களே.. அப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சி மூலம் மாறி இருக்கிறது. மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் உங்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.

Guru peyarchi palan 2024 What will happen for the Meena Rasi

இத்தனை கால கஷ்டம்: இத்தனை காலம் மீன ராசிக்காரர்களுக்கு திருமண உறவில் சிக்கல் இருந்தது. திருமணம் நடப்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கும். திருமணம் செய்து கொள்ள ஆட்கள் கிடைக்காத நிலை இருந்தது.

ஏற்கனவே திருமணம் ஆனவர்களுக்கு கணவன் மனைவி தனி தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சிலருக்கு டைவர்ஸ் செய்ய வேண்டிய மோசமான சூழல் கூட ஏற்பட்டது.

இன்னும் சில மீன ராசிக்காரர்களுக்கு கடுமையான கடன் நிலவி வந்தது. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை இருந்தது.

குடும்பத்தில் அண்ணன், தம்பிகளை நம்பி வாழ வேண்டிய மோசமான நிலை இருந்தது. பிறர் பணத்தில் வாழ வேண்டிய மோசமான சூழல் இருந்தது.

குடும்பத்தில் அம்மா, அப்பா உடன் கூட சண்டை போடும் அளவிற்கு கடினமான சூழல் இருந்தது. அதேபோல் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் கல்வியில் ஏகப்பட்ட சிரமங்கள் நடந்துள்ளன.

இனி எல்லாம் மாறும்;

திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மண வாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும்.

மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும்.

வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும்.

உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.

பாதகமாக போகும் விஷயங்கள்:

உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும்.

அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம்.

அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+