மொத்தமாக தூக்க போகும் குரு பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு என்ன நடக்கும்? முக்கிய பலன்
சென்னை: நேற்று நடந்த குரு பெயர்ச்சி பல ராசிதாரர்களின் வாழ்க்கையை புரட்டி போடப்படுகிறது.. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம். ஆகிய 4 ராசிகளுக்கு குரு பெயர்ச்சி எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும் .. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.
நேற்று முதல் மேஷ ராசியில் இருந்த குரு பகவான் நேற்று முதல் ரிஷப ராசிக்கு சென்றுள்ளார்.

மேஷ ராசி பலன்: இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களின் பொருளாதாரம் அடியோடு மாறப்போகிறது. கடனை எல்லாம் அடைக்க போகிறீர்கள். சுப செலவுகளை செய்ய போகிறீர்கள். சொந்த நிலம், வீடு என்று வாங்க போகிறீர்கள். நல்லதே நடக்கும்: அவருக்கு புதுப்பணம் வந்து இருக்கிறது என்று கமெண்ட் அடிப்பார்களே.. அப்படி புதுப்பணம் வந்தவர் போல உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது.
அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள். உங்களுக்கு வீடு, ஆரோக்கியம், குடும்ப நலம், திருமணம், பணம், என்று எல்லாம் கொட்ட போகிறது. குபேர யோகம் அடித்துவிட்டது என்று சொல்வார்களே.. அப்படி ஒரு குபேர யோகம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 11வது வீட்டில் இருப்பதால் அடிக்க போகிறது.
போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். .
ரிஷப ராசி: ரிஷப ராசிக்கு இத்தனை காலம் 12ம் இடத்தில், அதாவது மேஷ ராசியில் இருந்தார் குரு. இப்போது ஜென்ம இடத்தில் குருவாக மாறி உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார்.
கொஞ்சம் கஷ்டம் இருக்கும்: இந்த குரு உங்கள் வீட்டிற்கு வருவதால்.. நீங்கள் இனி செய்வதில் எல்லாம் கொஞ்சம் இடர்பாடுகள் வரும். எதாவது ஒரு விஷயத்தை செய்ய நினைத்தால் அது தடங்கலாக மாறும். பைக்கை ஸ்டார்ட் செய்ய நினைத்தால் கூட பேட்டரி போய் நிற்குமே.. அப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தடங்கல்கள் வரும்.
தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும்: இப்படி தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். ரிஷப ராசிக்கு ஜென்ம இடத்தில் குரு மாற உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார். அவர் இருக்கிற இடத்தை விட பார்க்கிற இடம் முக்கியம் என்பதால் தடங்கல்கள் வந்தாலும்.. நீங்கள் நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள். நல்ல விஷயங்கள் என்னென்ன?: எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: போக்குவரத்தில் கவனமாக இருங்கள். நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம்.
மிதுனம் ராசி பலன்: உங்களுக்கு 12ம் வீட்டில் குரு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கண்டிப்பாக உங்களுக்கு நிறைய பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.
சுப செலவாக மாற்றுங்கள் - சான்ஸ் கிடைக்காது: ஆம் காசு எவ்வளவு வந்தாலும் பணம் கையில் இருக்காது. வருகின்றன பணம் எல்லாம் செலவிற்கே போதுமானதாக இருக்கும். இதை சமாளிக்க நீங்கள் சுப செலவுகளை செய்யலாம். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வர உள்ளது. அதனால் சுப செலவுகள் என்பது உறுதியாக இருக்கும். பார்வை - வீடு வாங்கலாம்: குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வருவதால் வீடு வாங்கும் ராசி உள்ளது. நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம்.
ஆரோக்கியத்தில் கவனம் - உறவில் கவனம்: ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில்கே கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம். சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள்.
கடகம் ராசி பலன்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் கடக்க ராசிக்காரராகில். அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல விதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். இத்தனை காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கிற வேளையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கை மாற போகிறது.
சிம்மாசனத்தில் அமரும் காலம் : முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல வேலைகள் உங்கள் வீட்டை தேடி வரும்.
அரசு வேலை கூட தேடி வரும். வேலை ரீதியாக உங்களுக்கு வெற்றி மீது வெற்றி குவிந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஏற்கனவே பார்க்கும் வேலையில் மே மாத்திற்கு பின் திடீர் ப்ரோமோஷன் கிடைக்கும். அதாங்க திடீர் என்று டிஎல் ஆவது, மேனேஜர் ஆவது என்று உங்கள் வேலையில் நீங்கள் சிம்மாசனத்தில் அமர போகும் காலம் வந்துவிட்டது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்; அதேபோல் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.
லாபமாக கொட்டும்: உங்களுக்கு கஷ்டமாக இருந்த பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். பிஸினஸில் செய்யும் முதலீடுகள் லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது.மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications