Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2023: அட்சய திருதியை நாளில் மேஷத்திற்கு இடம் பெயரும் பொன்னவன்.. யாருக்கு பொற்காலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன ராசியான தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு பகவான் சித்திரை மாதம் 9ஆம் தேதி ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ஆண்டு குரு பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த நாள். அன்றைய தினம் அட்சய திருதியை. பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் யாருக்கெல்லாம் பொற்காலம் பிறக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குருவின் பார்வை மேஷ ராசியில் இருந்து சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. குரு பெயர்ச்சியால் சிலருக்கு பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு திருமணயோகம் வரும் சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு குரு என்ன பலன்களை தருவார்? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சியால் என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று சுருக்கமாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராகு இருக்கும் இந்த சூழ்நிலையில் குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகளின் வாழ்க்கையில் சுப காரியம் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் அதனை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

மிதுனம்

மிதுனம்

குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடகம்

கடகம்

உங்களுடைய ராசிக்கு 6,9ஆம் வீட்டிற்கு உடைய குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். குரு பகவான் வேலை தொழிலில் எண்ணற்ற மாற்றங்களை தரப்போகிறார். அயராத உழைப்புக்கு சொந்தக்காரர் நீங்கள். குரு பகவானின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. அரசு வேலை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். அற்புதமான பொற்காலம் ஆரம்பமாகிறது.

கன்னி

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். அஷ்டம குரு வந்து ராகுவின் பாதிப்பை சற்றே குறைப்பார். தொழில் வேலை விசயங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் கண்டச்சனியால் ஏற்பட்ட கவலைகள் தீரு. குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். அதிக பேச்சு ஆபத்தை ஏற்படுத்தும் மவுன விரதம் நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம்

குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு பயணம் செய்யப்போவதால் கடன் எதிரிகள் தொந்தரவு கட்டுக்குள் இருக்கும் என்றாலும் பல புதிய கடன்கள் வாங்குவீர்கள். கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

தனுசு

குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவது யோகம். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பொன்னான காலம் பிறந்து விட்டது. புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. திருமண யோகம் கை கூடி வரும். ஏழரை சனியால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. பொன்னவன் குருவின் பொன்னான பார்வையால் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழப்போகிறது. அனுபவிக்கத் தயாராகுங்கள்.

 மகரம்

மகரம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

குரு பகவான் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். கடந்த ஆண்டுகளில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுடைய கடின முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். ஜென்ம சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை குரு பகவான் கட்டுப்படுத்துவார்.

மீனம்

மீனம்

ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு வரப் போகிறார். வம்பு, வழக்கு நீதிமன்ற பிரச்சினைகள் சாதகமாக முடியும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+