வாழ்க்கையை புரட்டி போட போகுது.. இன்று குரு பெயர்ச்சி.. மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
சென்னை: இன்று முதல் மீன ராசிக்காரர்களின் ராசிபகவான் குருபகவான் மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மேஷ ராசியில்தான் குரு பகவான் பயணம் செய்து கொண்டு இருந்தார். இன்று முதல் குரு பகவான் ரிஷப ராசிக்கு சென்றுள்ளார்.
இத்தனை கால கஷ்டம்: இத்தனை காலம் மீன ராசிக்காரர்களுக்கு திருமண உறவில் சிக்கல் இருந்தது. திருமணம் நடப்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கும். திருமணம் செய்து கொள்ள ஆட்கள் கிடைக்காத நிலை இருந்தது. ஏற்கனவே திருமணம் ஆனவர்களுக்கு கணவன் மனைவி தனி தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சிலருக்கு டைவர்ஸ் செய்ய வேண்டிய மோசமான சூழல் கூட ஏற்பட்டது. இன்னும் சில மீன ராசிக்காரர்களுக்கு கடுமையான கடன் நிலவி வந்தது. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை இருந்தது.
குடும்பத்தில் அண்ணன், தம்பிகளை நம்பி வாழ வேண்டிய மோசமான நிலை இருந்தது. பிறர் பணத்தில் வாழ வேண்டிய மோசமான சூழல் இருந்தது. குடும்பத்தில் அம்மா, அப்பா உடன் கூட சண்டை போடும் அளவிற்கு கடினமான சூழல் இருந்தது. அதேபோல் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் கல்வியில் ஏகப்பட்ட சிரமங்கள் நடந்துள்ளன.
இனி எல்லாம் மாறும்; திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மன வாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும்.
படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும். உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.
பாதகமாக போகும் விஷயங்கள்: உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும்.
அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications