7 வருட சிக்கல் ஓவர்.. பட்ட கஷ்டங்களுக்கு விடை! ஆனால் ஒரு செக்! குரு பெயர்ச்சியில் கலக்கும் அந்த ராசி
சென்னை; நாளை மறுநாள்.. மே 1ம் தேதி நடக்கும் குரு பெயர்ச்சி மாற்றத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பங்கள் நடந்துள்ளன. குடிசையில் இருப்பவன் கோட்டைக்கு சென்றுவிட்டான் என்று சொல்வார்களே.. அப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சி மூலம் மாறி இருக்கிறது.

மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும்.
குரு பெயர்ச்சி பலன்; மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.
7 வருட கஷ்டம்: கும்ப ராசிக்கு கடந்த 7 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்தது. உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது.
வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.
நடக்க போகும் சாதகமான விஷயங்கள்: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் களமிறங்குகிறார். 4ம் வீட்டில் குரு இருந்தால் நல்லதே நடக்கும்.. நன்றாக நடக்கும்.. நினைத்ததே நடக்கும் என்பார்கள். அப்படிதான் உங்களுக்கு நடக்க போகிறது.
உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும்.
நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது. புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. இதை தொழில்ஸ்தானம் என்பார்கள். இங்கே பார்வையிடுவதால் உங்கள் வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது.
உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டு,
பாதகமாக மாற போகும் விஷயங்கள்;
இத்தனை காலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. உடல் ஆரோக்கியம் சிக்கலாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும்.
இந்த குரு பெயர்ச்சி காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் .
அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications