நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி.. குரு பார்வையால் இந்த ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழைதான்!
சென்னை: குரு பார்வை கோடி நன்மையைத் தரும். குரு பகவான் மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்தாலும் குருவின் பார்வை சில ராசிகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் சில ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழைதான். எனக்கா இப்படி நடக்கிறது என்று ஆச்சரியத்தில் மூழ்கப்போகிறார்கள். எந்த ராசிக்காரர்கள் குரு பார்வையால் நன்மைகளை அடைந்து நன்றி சொல்லப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
குரு பகவான் பொன்னவன். குருவின் பயணம் சாதகமாக இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். திருமணம் கைகூடி வரும் புத்திர பாக்கியம் கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றியாக முடியும். குருபகவானுக்கு 5,7,9ஆம் பார்வை உள்ளது. குருவின் பார்வை கிடைத்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்தான். குரு பகவான் மீன ராசியில் வக்ரமாக பயணம் செய்தாலும் சில ராசிக்காரர்களுக்கு பார்வையால் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.
வக்ர பெயர்ச்சி என்றால் சிலருக்கு குழப்பமாக இருக்கும். சில கிரகங்கள் பின்னோக்கி மெதுவாக நகர்வதே வக்ர பெயர்ச்சி. குரு பகவான் நவம்பர் மாதம் வரை மீன ராசியிலேயே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பின்னோக்கி வக்ரமடைகிறார். இதுநாள்வரை முடியாமல் இருந்த சில நல்ல காரியங்களை வேகமாக முடித்து வைக்கும். குருபகவானின் பார்வை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் அடையப்போகும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கடகம்
மீன ராசியில் இருந்து குருபகவானின் 5ஆம் பார்வை கடக ராசியின் மீது விழுகிறது. குரு பார்வையால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து பெருகும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். தடைபட்டு வந்த தள்ளிப் போன திருமணம், குழந்தை பாக்கியம், புது வீடு குடியேறுதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைகள் நீங்கி கை கூடி வரும். உறவினர்கள வருகையால் வீடு களைகட்டும். புது வேலை கிடைக்கும். குலதெய்வக் கோயில் பணிகளைச் செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவானை வணங்குங்கள்
மீன ராசியில் சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு பகவான் வக்ரத்தில் செல்வதால், வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கடன் பிரச்னையால் கௌரவத்துக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் எழும். வீண் சந்தேகத்தால் நல்ல உறவுகள், நட்புக்களை இழக்க நேரிடும். மனப்பதற்றத்தை தவிர்த்து குரு பகவானை வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்குங்கள் பாதிப்புகள் குறையும்.

கன்னி
குரு பகவானின் 7ஆம் பார்வை கன்னி ராசியின் மீது விழுகிறது. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என்று பாடப்போகிறீர்கள். பல காலமாக முயன்றும் முடிக்க முடியாத காரியங்களை இனி முடித்துக் காட்டுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். பணப்பிரச்சினையால் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேருவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தை திருப்பித் தருவார்கள். 120 நாட்கள் குரு வக்ரத்தில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். உறவினர்கள், சகோதரர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்
குரு பகவானின் ஒன்பதாம் பார்வை விருச்சிகம் ராசியின் மீது விழுகிறது. ஏழரை சனி, ஜென்ம கேது என பல காலமாகவே கஷ்டங்களை மட்டுமே அனுபவித்த உங்களுக்கு இப்போதுதான் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்து வருகிறது. நன்றாக தூங்கி பல வருஷம் ஆகிவிட்டது என்று கவலைப்பட்ட நீங்கள் இனி நிம்மதியாக உறங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். சில பிரச்சினைகளால் விலகியிருந்த கணவன்-மனைவிக்குள் இனி அந்நியோன்யம் பிறக்கும் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.

காரிய வெற்றி உண்டாகும்
அம்மாவிற்கு இருந்த நோய் விலகும். தாய்வழி உறவினர்களிடம் இருந்த சிக்கல்கள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பங்கு பிரச்சினையில்லாமல் கைக்கு வரும். உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால்,எதிர்பாராத சில காரியங்கள் எளிதில் முடிவடையும். வீட்டுப் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பளு அதிகரிக்கும். அதிக வேலை இருக்கிறதே என்று பதற்றமும் அடையவேண்டாம் ரிலாக்ஸ் ஆக செய்து முடியுங்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications