குரு வக்ர பெயர்ச்சி பலன்.. கோடி கோடியாக வரும் பணம்.. குரு பகவானால் திடீர் திருப்புமுனை யாருக்கு?
மதுரை: நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில் செல்வார்கள். சர்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கி நகர்வார்கள். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். செப்டம்பர் 4 முதல் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமடைகிறார். குரு வக்ர பெயர்ச்சியால் கோடி கோடியாக செல்வம் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் வக்ரம்: குருபகவான் அதிசாரம், வக்ரம் அடையும் போது ராசிகளுக்கு சில பலன்களைத் தருவார். நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. வக்கிரம் பெற்ற கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன்களைத் தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுபலன்களைத் தருவார்கள்.

மேஷம்: ஜென்ம ராகு உடன் பயணம் செய்யும் குரு பொருளாதார ரீதியாக சில சங்கடங்களை ஏற்படுத்துவார். எவ்வளவுதான் பணம் வந்தாலும் செலவு கையை கடிக்கும். ராசிக்கு 5ஆம் வீடு, ஏழாம் வீடு, ஒன்பதாம் வீட்டை பார்க்கும் குருபகவானால் திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் விரைவில் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் திடீர் கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
ரிஷபம்: உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் குருபகவான் வக்ரமடைகிறார், இன்பமும், துன்பமும் இணைந்த காலகட்டம் இதுவாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சுப விரைய செலவுகள் வீடு தேடி வரும். செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடியுங்கள். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.
மிதுனம்: உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் குருபகவான் வக்ரமடைகிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். நினைத்த காரியம் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணபலமும் அதிகமாகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அமைதியும் ஆனந்தமும் குடியேறும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். அரசமரத்திற்கு தினசரி தண்ணீர் ஊற்ற நன்மைகள் நடைபெறும்.

கடகம்: குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீடான கர்ம ஸ்தானத்தில் வக்ரமடைகிறார். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண முதலீடுகளை கவனமாக கையாளுங்கள். அகலக்கால் வைக்க வேண்டாம். குருபகவான் ராசிக்கு இரண்டாம் வீடு நான்காம் வீடு, மற்றும் ஆறாம் வீடுகளின் மீத விழுகிறது. கடன்கள் அடைபடும். எதிரிகள் தொல்லை ஒழியும். பணவருமானம் அதிகமாக இருந்தாலும் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை. அஷ்டமத்து சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் வக்ரமடைகிறார். உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நன்மைகள் நடைபெறும் காலம் இதுவாகும். வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். ஒன்பதாம் இடம் தர்ம ஸ்தானம். இந்த இடத்தில் உள்ள ராகு உடன் குருபகவான் பயணம் செய்யும் இந்த கட்டத்தில் ஆன்மீக பயணம் அதிகரிக்கும். அப்பாவினால் நன்மைகள் கூடும். குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. ராசிக்கு மூன்றாவது வீடு, ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உற்சாக மனநிலையில் இருப்பீர்கள்.

கன்னி: குருபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, கவலைகள் வந்து செல்லும். புதிய வேலைக்காக என்னதான் முயற்சிகள் செய்தாலும் சில தடங்கள் ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடு, நான்காவது வீடு, 12வது வீட்டினை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும், வீடு, நிலம் வாங்குவீர்கள். உடல் நலமும் பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருக்கவும். அஜீரணக்கோளாறு ஏற்படும் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் பசு நெய் வாங்கி தானம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications