குரு வக்ர பெயர்ச்சி பலன் 2023: ஆடி போய் ஆவணி வந்தால் இந்த 4 ராசிக்காரர்கள் வீட்டில் பண மழை

Subscribe to Oneindia Tamil

மதுரை: குரு பகவான் பொன்னவன். குருவின் பயணம் சாதகமாக இருந்தால் நல்ல வேலை கிடைக்கும் கோடி கோடியாக பணம் வரும். மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் வக்ர கதியில் பயணம் செய்வார். நான்கு மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறார். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

குரு தரும் யோகம்: குரு பகவான் பார்வையால் தொட்டதெல்லாம் வெற்றியாக முடியும். குருபகவானுக்கு 5,7,9ஆம் பார்வை உள்ளது. குருவின் பார்வை கிடைத்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்தான். குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமாக பயணம் செய்தாலும் சில ராசிக்காரர்களுக்கு பார்வையால் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. குரு பகவானுக்கு 5ஆம் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் வக்ரமடைகிறார். குரு பகவானுக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் போது வக்ரநிவர்த்தி அடைகிறார். கிரகங்கள் மெதுவாக பின்னோக்கி நகர்தலே வக்ர நிலையாகும்.

Guru vakra peyarchi palan 2023 tamil: Simmam, Kanni, Thulam,Viruchigam prediction

சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. செப்டம்பர் மாதம் முதல் குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வை பாக்ய ஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்கிறது. தள்ளிப் போன சுப காரியங்கள் மள மளவென முடியும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும், உங்கள் வீட்டில் பண மழைதான். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். அலுவலகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மேலதிகாரி நட்புபாராட்டுவார். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சிலருக்கு வேறு நல்ல புது வாய்ப்புகளும் தேடி வரும். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி ஒடுங்கியிருந்த உங்களை ஓங்கி வளர வைப்பதுடன் எங்கும் எதிலும் வெற்றியையும், எதிர்பாராத வளர்ச்சியையும் தரும்.

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் அலுவலகத்தில் சிக்கல்கள் வந்து போகும். குடும்பத்தில் உறவினர்களிடையே நிமிர்ந்து சண்டை போடுவதை விட கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கணவன் - மனைவிக்குள் தேவையற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். மேலதிகாரி இனி உங்கள் திறமையை அங்கீகரிப்பர். எதிர்பார்த்த பதவியுயர்வு தேடி வரும். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது வாய்ப்புகள் அமையும். திறமைக்கேற்றபடி பாராட்டு, பதவியுயர்வு கிடைக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி செலவுகளை அதிகமாக்கினாலும், சொத்து சேர்க்கையையும், அலைச்சலையும் அதே நேரம் ஆதாயத்தையும் தரும்.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் மனதில் தெளிவு பிறக்கம். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வெற்றிகள் வீடு தேடி வரும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. குரு பகவான் வக்ர கதியில் பயணம் செய்ய இருப்பதால் உங்களின் புத்திக்கூர்மை அதிகமாகும். உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சிலருக்கு வீடு வண்டி வாகன யோகம் கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் நிதானமாகப் பணி செய்ய வேண்டியது அவசியம். அலுவலகத்தில் புரமோசனும் எதிர்பாராத இடம் மாற்றம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+