நாளை மறுநாள் குரு வக்ர பெயர்ச்சி.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு என்ன நடக்கும்? விரிவான பலன்
சென்னை: அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
கடக ராசிக்கு நடக்க போகும் விஷயங்கள்: உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.

உங்களுக்கு நிறைய பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும்.
நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும். ஆனால் இந்த குரு பெயர்ச்சி காரணமாக சில கெட்ட விஷயங்களும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்.
யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். நீங்கள் அதீதமாக வேலையில் ஈடுபடுபவர். நீங்கள் உறுதியானவர் மற்றும் சாதனைகளை கொண்டவர். பகல் கனவு காண வேண்டாம்.. செயல்களில் இறங்குங்கள் வெற்றி நிச்சயம். நீங்கள் ஓய்வு எடுப்பதை விரும்ப மாட்டீர்கள். பல ஊர்களுக்கு சென்று மக்களை பார்க்க விரும்புவீர்கள். காதல் மன்னன்.
தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆரோக்கியத்திலும், குடும்பதியிலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும்.
சிம்ம ராசிக்கு நடக்க போகும் விஷயங்கள்: சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள். மண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கசப்பான உறவு ஏற்படலாம். அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.
தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்திலும், குடும்பதியிலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்கவும். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும். இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது.
வேலை இருந்தால் நல்ல சம்பளம் இல்லை, சம்பளம் இருந்தாலும் 10 நாளைக்குதான் நிற்கிறது மீதம் மாதத்தில் 20 நாட்கள் கையில் பணம் இல்லை என்ற நிலைதான் இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை, சொத்துக்களை இழந்தது, நிலத்தை இழந்தது என்று எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டது. அதிலும் ஆரோக்கிய ரீதியாக நீங்கள் படாத கஷ்டம் இல்லை. காதலில், திருமண உறவில் கூட மிக மோசமான சூழ்நிலை உங்களுக்கு இருந்தது. இனி அந்த நிலை இருக்காது.
கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செல்வாக மாற்றுங்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும்.
பரிகாரம்: நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவும்.
கன்னி ராசிக்கு நடக்க போகும் விஷயங்கள்: புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும். எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.
வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம். திடீர் மயக்கம் ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும்.
உங்க ராசிக்கு கடந்த 10 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்தது. உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது.
வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.












Click it and Unblock the Notifications