பண மழை.. ராஜயோகம்.. இனி குபேர யோகம்தான்! தனுசு ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும்?
சென்னை: குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக தனுசு ராசிக்கு என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.. அவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்.. என்னென்ன மாதிரியான பலன்கள் ஏற்படும்.. என்று இங்கே பார்க்கலாம்.
குரு பொதுவாக சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது. அந்த வகையில் உங்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்களை இந்த குரு பகவானின் வக்ர பெயர்ச்சி ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும்.

ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் தனுசு ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. குரு பெயர்ச்சி மற்றும் அதன் வக்ர பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி.
பலன்கள்: உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது. நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். பொறுமையாக இருப்பதே உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் காக்கும். கஷ்டங்களின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், எந்த காரியமும் நடக்காமல் போகாது.
இதன் காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் . இத்தனை காலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. உடல் ஆரோக்கியம் சிக்கலாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார். முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும்.வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும். திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மன வாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்: சென்னை திருவான்மியூர் ஆறுபடை முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை தரும்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications