Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரடைப்பு, இதய முடக்கம் யாருக்கு வரும்? பரிகாரம் என்ன?

உயர் ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பக்கவாதம், அதனால் பேச்சுத் தடை, மாரடைப்பு, இதயப் பலவீனம், சிறுநீரக நோய், ஏன் மரணம் கூட ஏற்படலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் வித்தியாசம் என்ன?- வீடியோ

    சென்னை: இதய முடக்கம், மாரடைப்பினால் இன்றைக்கு பலருக்கு திடீர் மரணம் ஏற்படுகிறது. இதய நோய்க்கு ஜாதக ரீதியாக ஏற்படும் காரணங்களை அறிந்து கொள்வோம்.

    ஜாதகத்தில் நான்காமிடம் இதை இதயஸ்தானம். தாய்க்கு உரிய இடம் இது. இந்த இடம் பாதிக்கப்பட்டிருந்தால் தாய் வீடு,வாகனம் ,கல்வில பாதிப்புகள் ஏற்படும். திடீர் ஹார்ட் அட்டாக்கும் வரலாம்.

    உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம்.

    ஜாதக செக் அப்

    ஜாதக செக் அப்

    இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிடுகிறோம். இதனால் உடலானது நோய்களின் கூடரமாகிறது. மருத்துவரிடம் உடலை காண்பிப்பது போல ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து அதற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    சூரியனும் இதயமும்

    சூரியனும் இதயமும்

    இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜாதகத்தில் எட்டாம் பாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரஹங்களின் இணைவு ஏற்பட்டு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

    இதய நோய்க்கு காரணம்

    இதய நோய்க்கு காரணம்

    சூரியன்தான் இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டால் இதய முடக்கம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    குரு பகவான் பாதிப்பு

    குரு பகவான் பாதிப்பு

    இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இதய பிரச்சினை வரும். பொருளாதார திட்டமிடல், சிக்கனம்,சேமிப்பு இல்லாமை ,அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தால் உங்க ஜாதக கட்டத்தில் குரு அடிவாங்கியிருக்கார் அதாவது நீசம், மறைவு பெற்று பாதிக்கப்பட்டிருக்கார்னு சொல்லலாம். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    4ஆம் இடத்தில் சூரியன்

    4ஆம் இடத்தில் சூரியன்

    சூரியன் அல்லது சந்திரன் 4ல் இருந்து சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப் பெற்றால் இதய நோய் வரும்.
    கடகம் சிம்மம் இந்த ராசிகளில் கிரகம் பாதிக்கப்பட்டு இருந்து சனி, சந்திரன், செவ்வாய் தசை புத்தி நடக்கும் போது இதய நோய் வரும்.

    திடீர் இதய நோய்

    திடீர் இதய நோய்

    லக்கினாதிபதி ராசியதிபதி 3ம் அதிபதி இவர்கள் கடகம் சிம்மத்தில் இருந்தால் இதய நோய் வர ஜாதகரே காரணமாக இருப்பார். கேது 4ம் இடத்தில் அல்லது கடக சிம்மத்தில் இருந்தாலே ஜாதகர்க்கு இரத்த அழுத்த நோய் காரணமாக இதய நோய் திடீர் என்று வரும். 4ம் அதிபதி அல்லது சூரியன் லக்கினத்திற்கு மறைந்து 4ம் இடத்தில் பாபர் அமர்ந்து தசை நடத்தினால் இதய நோய் வரும்.

    கொழுப்பு சத்து அதிகரிப்பு

    கொழுப்பு சத்து அதிகரிப்பு

    ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும். சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

    சனி செவ்வாய் சேர்க்கை

    சனி செவ்வாய் சேர்க்கை

    ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    சந்திரன் பாதிப்பு

    சந்திரன் பாதிப்பு

    இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

    முருகனை வணங்கலாம்

    முருகனை வணங்கலாம்

    தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஜாதகத்தில் சூரியன், குரு பாதிக்கப்பட்டவர்கள் இதயம் பகுதியில டச் ஆகிறாப்ல வேல் உருவ டாலர். தியானம் பண்ணும் போது முருகன் வேல், தாமிரத்தில் டாலர் செய்து கழுத்தில் அணிய இதய பாதிப்புகளை தவிர்க்கலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+