உயர்கல்வி யோகம் யாருக்கு இருக்கு - பட்டப்படிப்பை தீர்மானிக்கும் கிரகங்களின் கூட்டணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: பள்ளிப்படிப்பை முடித்து விட்டு பட்டப்படிப்பு படிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களே என்ன படிக்க வைக்கலாம் என்று ரொம்ப குழம்ப வேண்டாம், உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் எந்தக் கிரகம் வலிமை பெற்றுள்ளது என்பதையும்,அது எந்த பாவங்களோடு தொடர்பு பெற்றுள்ளது என்பதையும் பார்த்து அதற்கேற்ப கல்லூரிகளில் சேர்த்து விடுங்கள். நம் ஜாதக அமைப்பில் எந்த கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன என்பதைக் கொண்டு நமக்கு எந்த உயர்கல்வி அமையும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஒரு சில மாணவர்கள் ஓரளவு படித்தாலே நிறைய மதிப்பெண் பெறுகிறார்கள். ஒரு சிலர் எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. கடின உழைப்பு, விடா முயற்சியுடன் படிக்கும் மாணவர்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை. ஆனாலும், எந்த கல்விப் பிரிவில் நாம் சாதிப்பதற்கான வாய்ப்பு இருப்பது என்பதை ஜாதகத்தை பார்த்து முடிவு செய்து சேர்த்தால் அந்த மாணவர்கள் சாதனையாளராக திகழ்வார்கள். இல்லாவிட்டால் கல்வியை பாதியிலேயே விடவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

நாம்தான் டாக்டர் இன்ஜினியர் படிக்க ஆசைப்பட்டோம் ஆனால் முடியவில்லை நம் பிள்ளைகளையாவது படிக்க வைப்போம் என்று பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். சிலருக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசையிருக்கும், சிலருக்கு சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசையிருக்கும், ஐடி படித்து விட்டு இயற்கை விவசாயத்தில் சாதிப்பவர்கள் இன்று இருக்கின்றனர். இது அவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலையைப் பொறுத்தே அமைகிறது. ஜாதகத்தில் சுப கிரகங்கள் வலிமைப் பெற்றால் மூளைக்கு வேலையைத் தரும் கல்வியையும், ஏசி அறையில் அமர்ந்து வேலை பார்க்கும் அமைப்பையும் ஏற்படுத்தி தரும். பாவக்கிரகங்கள் வலிமை பெற்றால் டெக்னிக்கல் கல்வியையும்,உடல் உழைப்பைத் தரும் வேலையைத் தந்து உயர்த்தும்.

ஜாதகத்தில் கிரகங்களின் நிலை

ஜாதகத்தில் கிரகங்களின் நிலை

நாம் படிக்கும் படிப்பு மருத்துவக் கல்வியா? பொறியியல் துறையா? கணிதமா? அறிவியலா என்பதை நம் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் தீர்மானிக்கின்றன. ஜாதகத்தில் ராசிகளில் அமைந்துள்ள கிரகங்களின் கூட்டணி, எந்த வீடுகளில் எந்த கிரகம் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து நாம் படிக்கும் படிப்பை தீர்மானிக்கலாம்.

உயர் கல்வி யோகம் தரும் நிலை

உயர் கல்வி யோகம் தரும் நிலை

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் 2ஆம் இடம் எனப்படும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமானது அடிப்படைக் கல்வியைப் பற்றி அறிய உதவுகிறது. 4ம் வீடு ஒருவரின் கல்வி அறிவு, திறமை பற்றி அறிய உதவும். பொதுவாக கல்வி ஸ்தானம் 4ஆம் இடம் என்பதால், 4ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையாமல் 4ம் அதிபதி வலு இழக்காமல் இருந்து 5ம் அதிபதி வலுவாக இருந்தால் கல்வியில் எந்தவித தடையும் இன்றி சாதனை செய்வார்கள். 5ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி 4,5 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்வார்கள்.

பட்டப்படிப்பில் சாதனை

பட்டப்படிப்பில் சாதனை

பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 5ல் ஓர் உச்ச கிரகம் அமையப் பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று 5ஆம் அதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். 5ஆம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலக்கூடிய யோகம் உண்டாகும். மேலும், மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

நிதி, நீதித்துறையில் வேலை

நிதி, நீதித்துறையில் வேலை

உங்கள் பிள்ளைகள் ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி,உச்சம்,நட்பு என்ற நிலையில் இருந்தால் குருவின் ஆதிக்கம் உள்ள ஜாதகம். கல்வித்துறை,நிதித்துறை,நீதித் துறை, நிர்வாகத்துறை, அறநிலையத்துறை பணிகளுக்கு படிக்க வைத்தால் வெற்றி பெறுவார். குரு 2,4,10 ம் பாவத்திலோ,அதன் அதிபதிகளோடா இணைவு பெற்றிருந்தால் ஆசிரியர்,பேராசிரியர், வழக்கறிஞர், வங்கி பணிக்கு படிக்க வைக்கலாம்.

கல்விக்கு அதிபதி புதன்

கல்விக்கு அதிபதி புதன்


புதன் அருள் இருந்தால்தான் புத்திக்கூர்மை, சமயோசித புக்தி, நினைவாற்றல் நன்றாக இருக்கும். புதன் ராசி, அம்சம் இரண்டிலும் பலத்துடன் இருப்பது அவசியம். புதன் நீசம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பதும் நல்லது. சிலருக்கு மறைந்த புதன் நிறைந்த கல்வியைத் தருவார். ஒருவருக்கு கன்னி ராசி 6,8,12ஆம் இடமாக அமைந்து அங்கு புதன் ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தாலும் கல்வியில் சாதிப்பார். உயர்கல்வி யோகம் அமையப் பெற்று பத்திரிகைத்துறை, எழுத்தாளர், பேச்சாளர், விரிவுரையாளர், கணினி அறிவு என அனைத்திலும் ஜொலிக்க முடியும். மருத்துவம், பொறியியல் படிப்பு படிக்க எந்த நட்சத்திரக்காரர்களுக்கு யோகம் இருக்கிறது. சினிமா துறையில் சாதிக்கவோ, ஆசிரியராக வேலை செய்யவோ யாருக்கு ராசியிருக்கிறது என்று இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+