நவம்பர் 2018: தீபாவளி, திருக்கார்த்திகை, என்னென்ன விசேஷம் இருக்கு தெரியுமா?
நவம்பர் மாதம் தீபாவளி, திருக்கார்த்திகை என பல முக்கிய பண்டிகை தினங்கள் உள்ளன. நவம்பர் மாதம் என்னென்ன விசேஷ நாட்கள் வருகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: அக்டோபர் முடியப்போகிறது. நவம்பர் மாதம் இரு தினங்களில் பிறக்கப் போகிறது. நவம்பர் மாதம் தமிழ் மாதங்களில் ஐப்பசி, கார்த்திகை இணைந்து வருகிறது. தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை என முக்கிய பண்டிகை தினங்கள் இந்த மாதத்தில் வருகிறது.
4-11-2018 ஐப்பசி 18ஆம் தேதி ஞாயிறு கோவஸ்த துவாதசி இன்றைய தினம் மாலை பிரதோஷ நேரத்தில் பசு, கன்றை வழிபட குழந்தைகள், பெண்கள் உடல் நலம் சிறப்படையும்.

05-11-2018 ஐப்பசி 19ஆம் நாள் திங்கட் கிழமை யமதீபம், தனத் திரயோதசி, தன்வந்திரி ஜெயந்தி - தெற்கு நோக்கி தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். ஆரோக்கியம் சிறப்படையும். தன்வந்திரி பகவானை வணங்கலாம். தங்கம், வெள்ளி உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க நல்ல நாள்.
06-11-2018 ஐப்பசி 20 செவ்வாய்கிழமை தீபாவளி நரக சதுர்தசி அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமி பூஜை செய்யலாம்.
07-11-2018 ஐப்பசி 21 புதன்கிழமை கேதார கௌரி விரதம் கௌரி பூஜை செய்யலாம். லட்சுமி குபேர பூஜை செய்ய ஏற்ற நாள்.
09-11-2018 ஐப்பசி 23 வெள்ளிக்கிழமை யமத்துவிதியை இன்று அண்ணன் தம்பிகளுக்கு விருந்து கொடுத்து அவர்களின் ஆசிகளை பெறலாம்.
13-11-2018 ஐப்பசி 24 செவ்வாய்கிழமை கந்த சஷ்டி இன்று முருகனை வழிபட தொழிலில் வெற்றி கிடைக்கும்.
17-11-2018 கார்த்திகை 1 சனிக்கிழமை முடவன் முழுக்கு இன்று காவிரியில் நீராடினால் சகல நன்மைகளும் நடைபெறும்.
22-11-2018 கார்த்திகை 6 வியாழன் பரணி தீபம் அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடலாம். இன்று சந்திர ஜெயந்தி. நவகிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். தோஷங்கள் நிவர்த்தியாகும்.
30-11-2018 கார்த்திகை 14 காலபைரவாஷ்டமி இன்று காலபைரவரை வழிபடலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications