ஜனவரியில் முக்கிய விஷேச, விரத தினங்கள்: ஆஞ்சநேயர் ஜெயந்தி, தை பொங்கல், தை பூசம்
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைபொங்கல், மாட்டுபொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட பல முக்கிய விஷேச தினங்கள் உள்ளன.
சென்னை: ஜனவரி மாதம் பல முக்கிய விஷேச விரத தினங்கள் இருக்கின்றன. ஆஞ்சநேயர் அவதரித்தது மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரம், இது ஜனவரியில் வருகிறது. சூரியனுக்கு உகந்த தை பொங்கல், மகர சங்கராந்தி, முருகனுக்கு உகந்த தைப்பூசம் என பல முக்கிய தினங்கள் இருக்கின்றன.
மார்கழி, தை மாதம் இணைந்து ஜனவரி மாதம் உள்ளதால் முக்கிய முகூர்த்த நாட்களும் உள்ளன. கடன் தீர்க்க, காது குத்த, திருமணம் செய்ய, வண்டி, வாகனம் வாங்க முக்கிய நாட்களும் உள்ளன.

நல்ல காரியம் செய்ய, வீடு கிரகப்பிரவேசம் செய்ய ஜனவரி மாதம் நல்ல நாட்களை பார்க்கலாம்.
ஜனவரியில் முக்கிய விரத நாட்கள்:
ஜனவரி 5, 2019 மார்கழி 21, சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி ஆஞ்சநேயரை வழிபட குறைகள் தீரும் நன்மைகள் நடைபெறும்.
ஜனவரி 11, மார்கழி 27, வெள்ளிக்கிழமை கூடாரவல்லி. அதிகாலை பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆண்டாளை வணங்க திருமண பாக்கியம் கிடைக்கும்.
ஜனவரி 14, மார்கழி 30 போகிப்பண்டிகை வீடுகளை சுத்தம் செய்து முன்னோர்களை வழிபட ஏற்ற நாள்.
ஜனவரி 15 தை 1, செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை, சூரியபகவானுக்கு பொங்கல் வைத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.
ஜனவரி 16, தை 2 மாட்டுப்பொங்கல், கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நாள்
ஜனவரி 21, தை 7 தைப்பூசம் முருகனை வழிபடலாம்
திருமணம், முகூர்த்த நாட்கள்:
ஜனவரி 23, 27,30 திருமணம், சீமந்தம், உபநயனம், வாசல்கால் வைக்க புது வண்டி வாங்க, கிரகப்பிரவேசம், காது குத்த நல்ல நாட்கள்
கடன் தீர்க்க: ஜனவரி 2,5,8,1215,19,22,24,30 ஆகிய நாட்களில் கடன்களை செட்டில் செய்ய கடன் பிரச்சினை தீரும்.
ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள: ஜனவரி 2,3,8,11,12,13 16,19,20,21,23,24,25,27,30 நல்ல நாட்கள்
ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். நல்ல நாள் நேரம் பார்த்து செய்ய செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஜென்ம நட்சத்திரம், உகந்த திதி பார்த்து செய்யலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications