மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் - மார்ச் மாதத்தில் முக்கிய விஷேச தினங்கள்
சென்னை: பனிக்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது. இந்த மாதத்தில் மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, தெய்வீக திருமணங்கள் நிகழும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன.
மாசி மாதம் மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். காரடையான் நோன்பு கொண்டாடப்படுவது மார்ச் மாதத்தில்தான்.

மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான். மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. மார்ச் மாதத்தில் முக்கிய முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் நடைபெறும் நாட்களைப் பார்க்கலாம்.
முக்கிய விரத நாட்கள்:
04-03-2019 மகா சிவராத்திரி இன்று இரவு முழுவதும் கண் விழித்து நான்கு ஜாமங்களிலும் சிவ பூஜை செய்யலாம் சகல பாவங்களும் தீரும்.
06-03-2019 ஸ்ரீராமரையும் ஆஞ்சநேயரையும் இன்று தரிசனம் செய்ய பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடுவார்கள்.
15-03-2019 காரடையான் நோன்பு : அதிகாலை 4 முதல் 5 மணிவரை கௌரி பூஜை செய்ய நல்ல நேரம். சத்தியவான் சாவித்திரி கதை படிக்க தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
21-03-2019 பங்குனி உத்திரம்: தெய்வீக திருமணங்கள் நிகழும் பங்குனி உத்திரம். ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவம் தரிசனம் செய்ய திருமண வரம் கிடைக்கும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
முகூர்த்த நாட்கள்:
மார்ச் 3, 4,10,13,17,22,25, 31 திருமணம், சீமந்தம் உபநயனம், வாசல்கால் வைக்க, கிரக ஆரம்பம், மாங்கல்யம் செய்ய, புது வண்டி வாங்க, வித்யாரம்பம், தொழில் தொடங்க நல்ல நாட்கள்.
வாஸ்து நாள்:
மார்ச் 3, 2019 மாசி 22 வாஸ்து நாள். காலை 10.39 மணி முதல் 11.15 வரை வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம்.
புது வண்டி வாகனம் வாங்க நல்ல நாட்கள்
மார்ச் 3,13,17,31
ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள நல்ல நாட்கள்
மார்ச் 3,4,5,8,10,11,12,13,16,17,19,20,22,23,25,30,31
புது கணக்குப் போட மார்ச் 31 நல்ல நாள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications