வைகாசியில் வாஸ்து செய்ய, திருமணம் முடிக்க நல்ல நாட்கள் - விஷேச தினங்கள்
வைகாசி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பல மகான்கள் பிறந்துள்ளனர். கடவுள் நரசிம்மரின் அவதாரம், முருகனின் அவதாரம் நிகழ்ந்துள்ளது. நல்ல முகூர்த்த நாட்களும் உள்ளன.
மதுரை: வைகாசி மாதத்தில் நரசிம்மர் ஜெயந்தி, முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. வைகாசியில்தான் வியாசர் தங்கத்தட்டில் அவதரித்தார். நம்மாழ்வார், சேக்கிழார், திருஞான சம்பந்தர், காஞ்சி மகா பெரியவர் ஆகிய மகான்களின் அவதாரம் நிகழ்ந்துள்ளது.
வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது திரயோதசி, பெளர்ணமி நாளில்தான்.
ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு எண்ணற்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் மறைந்திருக்கும் அகோபிலம் நரசிங்கமூர்த்தி, வைகாசி விசாகத்தில்தான் சந்தனக் காப்பைக் களைந்து விக்கிரக உருவத்தில் காட்சி தருவார். அதன்பின் அடுத்த வைகாசி விசாகத்தில்தான் நரசிங் மூர்த்தியை முழுமையாக மீண்டும் தரிசிக்க முடியும்.
புத்தர் அவதரித்தது வைகாசி பௌர்ணமியில்தான். இந்த மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து திருமணம், வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட பல நல்ல காரியங்களைச் செய்யலாம். திருமணம் செய்ய, சீமந்தம் செய்ய, காது குத்த நல்ல நாட்கள் உள்ளன.

வைகாசி மாத முக்கிய விஷேச நாட்கள்:
மே 15, வைகாசி 1 புதன் ஜெயந்தி
மே 17, வைகாசி 3 நரசிம்மர் ஜெயந்தி
மே 18 வைகாசி 4 வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா
மே 19 வைகாசி 5 காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி
முகூர்த்த நாட்கள்:
மே 16,17,29, ஜூன் 6,13,14 ஆகிய நாட்களில் திருமணம், சீமந்தம், காதுகுத்த,புது வண்டி வாங்க, தொழில் தொடங்க நல்ல நாட்கள்.
கிரகப்பிரவேசம்
ஜூன் 6,13,14 ஆகிய நாட்களில் ஆகிய நாட்களில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.
வாஸ்து நாள்:
வைகாசி 21, ஜூன் 4,2019 காலை 10.02 முதல் 10.38 வரை வாஸ்து செய்ய நல்ல நாள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications