எள்ளும் தர்ப்பையும் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

தர்ப்பணம் அளிக்கும் போது எள்ளும், தர்ப்பையும் அவசியம் பயன்படுத்தப்பட வேண்டும். எள்ளானது திருமாள் வியர்வைத் துளியில் இருந்து உருவான பரிசுத்தமான தானியம் ஆகும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பித்ரு தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் தில ஹோமம் செய்யலாம். எள்ளை தானம் கொடுக்கலாம்.

தானம் செய்யும் போது எள்ளை தானம் செய்தால் அது அளவிட முடியாத அளவுக்கு பலன் கிடைக்கும். எப்பேற்பட்ட பாவமும் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

Important of black sesame seeds during Pitru Paksha

பித்ருபட்ச காலங்களில் சுத்தமான சைவ உணவை ஒரு பொழுது உண்ண வேண்டும். பித்ரு பூஜையை ஸ்ரீமந் நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

புரட்டாசி மாதம் எமனின் கோரைப்பற்கள் வெளியே தெரியும் மாதமாக இருப்பதால் புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன.

புனித தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னர்களை அழைத்து பித்ரு பூஜையை செய்யக் சொல்லி பலன் பெறலாம். அன்னதானம், உடை தானம், பசு தானம் ஆகியவை மிகவும் போற்றப்படுகின்றன. இதில் உங்களுக்கு எந்த தானத்தை செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள்.

தோஷங்களில் மிகவும் கொடுமையானது பித்ரு தோஷம். ஒருவருக்குத் திய மகாதசை புத்தி காலங்களில் பித்ரு தோஷம் மிகக் கடுமையாக பாதிக்கும். இந்த தோஷத்தினால் வேலை இழப்பு, வியாபாரத்தை இழுத்து மூடும் நிலை, கடுமையான நிதி நெருக்கடி, சிறைவாசம், குடும்பத்தில் பிளவு என பாதகமான சூழ்நிலை எல்லாம் ஒன்று சேர்ந்து பாடாய்ப்படுத்திவிடும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ம் இடத்தில் சூரியன், தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், ராகு, சனி, கேது ஆகியவை ஏதேனும் ஒன்று இருந்தால் அவர் பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் என்று கூறலாம்.

ஐந்து (அ) ஒன்பதாம் இடம் பலமிழந்து இருப்பது, ஐந்து (அ) ஒன்பதாம் வீட்டு அதிபதியுடன் ராகு (அ) கேது சேர்ந்திருப்பது மற்றும் ஜாதகத்தில் சூரியனுடன் இணைந்த ராகு (அ) கேது இருப்பது போன்றவை பித்ருதோஷ என்று கூறலாம். பித்ரு தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் தில ஹோமம்தான் ராமேஸ்வரத்தில் மட்டுமே திலஹோமம் சிறப்பாக செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+