சூரியன், குரு, சுக்கிரன் கிரகங்கள் வீக்கா இருக்கா... கை கொடுக்கும் மஞ்சள், மிளகு, பட்டை
நம் வீட்டு கிச்சனில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் உள்ள மிளகு, மஞ்சள், பெருஞ்சீரகம், பட்டை உள்ளிட்ட சமையல் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களிடம் இருந்தும் பாதுகா
சென்னை: இந்திய சமையலில் அதிகம் வாசனைப் பொருட்கள், மசாலா பொருட்களை உபயோகிக்கின்றனர். அது உணவின் ருசியை அதிகரிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. கூடவே நமது ஜாதகத்தில் அதிகம் வீக்காக உள்ள கிரகங்களின் பாதிப்பில் இருந்து இந்த சமையல் பொருட்களே பாதுகாக்கிறது.
அன்றாட சமையலில் பயன்படுத்தும் மஞ்சள் குருபகவானின் அம்சமாக திகழ்கிறது. மிளகு சூரியன், சந்திரனின் அம்சமாக திகழ்கிறது. இவற்றை அன்றாட சமையலில் உபயோகிப்பவர்களுக்கு இந்த கிரகங்கள் வீக்காக இருந்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது.
ஜாதகத்தில் வீக்காக இருக்கும் கிரகங்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் சமையல் பொருட்களையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் பார்க்கலாம்.

பெருஞ்சீரகம் - சுக்கிரன்
நமது சமையலில் பெருஞ்சீரகத்திற்கு தனி சிறப்பிடம் உண்டு. ஜீரண சக்தியை அதிகரிக்கும், இந்த பெருஞ்சீரகம் சுக்கிரனின் அம்சமாக திகழ்கிறது. சுக்கிரன் களத்திரகாரகன், காதல் நாயகன். பொதுவாகவே வாசனை பொருட்கள் இருக்குமிடத்தில் சுக்கிரனின் அம்சம் நிறைந்திருக்கும். தினசரி உணவில் பெருஞ்சீரகம் சேர்த்துக்கொண்டால் அசிடிட்டி பிரச்சினை வராது. சுக்கிரன் வீக்காக இருந்தாலும் பாதிப்புகள் சரியாகும். வெல்லத்துடன் பெருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் நமது வேலைகள் வெற்றியடைய செவ்வாய் கிரகம் உதவி புரிவார்.

லவங்கப்பட்டை - செவ்வாய், சுக்கிரன்
தகத்தில் செவ்வாய்,சுக்கிரன் சேர்க்கை படுவிவகாரமானது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் பாதிப்பாக இருந்தால் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். இந்த பாதிப்பை தடுக்க லவங்கப் பட்டை சிறிதளவுடன் தேன் சேர்த்து சுத்தமான நீரில் கலந்து பருகினால் உடலில் சக்தி அதிகரிக்கும். மழை, பனி காலத்தில் ஏற்படும் கபம், சளி தொந்தரவுகள் நீங்கும்.

மிளகு - சூரியன், சந்திரன்
ஜாதகத்தில் ஒருவருக்கு சூரியன், சந்திரன் பாதிப்பாக இருந்தால் உடல் நல பாதிப்பு ஏற்படுவதோடு, மனநல பாதிப்பும் ஏற்படும். மழைக்கால சளி தொந்தரவுகள் அதிகரிக்கும். நாம் சாப்பிடும் டேபிள் மேல் மிளகு வைத்துக்கொள்ள வேண்டும். பாலில் மிளகு தூள் கலந்து சாப்பிடுவது சளி தொந்தரவுக்கு நல்லது. தாமிர சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சூரியன் சற்றே வீக்காக இருந்தாலும் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

பார்லி - புதன்
கிட்னியில் கல் பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு பார்லி நன்மை தரக்கூடியது. புதன் கிரகம் பாதிப்பாக இருந்தால் பார்லியை கஞ்சியை தயாரித்து அருந்தலாம்.

பச்சை ஏலக்காய் - ராகு, கேது
ராகு கேதுவினால் ஏற்படும் பாதிப்பினை பச்சை ஏலக்காய் சரி செய்கிறது. பாலுடன் பச்சை ஏலக்காய் கலந்து 6 வாரங்கள் சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் சரியாகும். உடம்பில் கால்சியம் சத்தினை அதிகரிக்கிறது. ஜீரண கோளாறுகள் இருந்தாலும் சரி செய்கிறது.

மஞ்சள் - குருபகவான்
இந்திய உணவுப்பொருட்களில் மஞ்சள் அதிகம் உபயோகிக்கின்றனர். மஞ்சள் குருபகவானின் அம்சமாகும். ஜாதகத்தில் குருபகவான் பாதிப்பாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் மஞ்சள் நூலினை கழுத்தில் அணிந்து கொள்ள பாதிப்புகள் குறையும். பாலுடன் மஞ்சள் கலந்து சாப்பிட நோய் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications