சர்வதேச முத்த தினம் : எந்த ராசிக்காரர்கள் முத்தம் கொடுப்பதில் கில்லாடி தெரியுமா?

அன்பை சொல்லும் வழி முத்தம், காதலை புரியவைக்கும் மொழி முத்தம் சர்வதேச முத்த தினமான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் எப்படி முத்தம் தருவார்கள் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: முத்தம் மருத்துவ குணம் கொண்டது. அன்பு, பாசம், நேசம், காதலை புரியவைக்கும் மொழி முத்தம். முத்தத்தை எங்கு எப்படி கொடுத்தால் என்ன பலன் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். முத்தம் கொடுப்பதில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தனி ஸ்டைல் உண்டு. காதலின் மொழியான முத்தத்தை எந்த ராசிக்காரர்கள் எப்படி கொடுப்பார்கள் என்று சர்வதேச முத்ததினம் கொண்டாடும் இந்த நேரத்தில் தெரிந்து கொள்வோம்.

முத்தத்தை கொடுத்தாலும் சரி அன்பானவர்களிடம் இருந்து முத்தத்தை வாங்கினாலும் சரி உடலும் மனமும் உற்சாகம் பூசிக்கொள்ளும். காரணம் முத்தத்தினால் ரத்த அணுக்களின் ஒவ்வொரு செல்லும் உற்சாகமடைகிறது. வயதான காலத்தில் பெற்றவர்களுக்கு பணம் கொடுத்து மருந்து மாத்திரை வாங்கிக் கொடுப்பதை விட அவ்வப்போது முத்தம் கொடுத்தாலே அவர்களின் நோய் எளிதில் குணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் வயதானவர்களுக்கு முத்த மருந்து கிடைக்காமலேயே போய்விடுகிறது என்பதுதான் சோகம்.

அன்பானவர்களுக்கு முத்தம் கொடுப்பது அவர்களிடம் இருந்து முத்தத்தை பெறுவதன் மூலம் காதல் ஹர்மோனான ஆக்ஸிடோசின் சுரப்பு தூண்டப்பட்டு மனதில் அன்பு, கருணையை அதிகரிக்கச் செய்கிறது. தலைவலி, உடல் சோர்வு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை முத்தம் குணமாக்குகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் முத்தம் எப்படி கொடுப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

நெருப்பு ராசியான மேஷத்தின் அதிபதி செவ்வாய். ரத்தம் முழுவதும் காதலை உணரவைப்பார். சாகசக்காரர்கள். கண்ட இடத்தில் முத்தம் கொடுக்க மாட்டார்கள். சரியான நேரம், இடம், ரொமான்டிக்கான மனநிலை அமைந்தால் அதை தவற விடாமல் முத்தம் கொடுத்து விடுவார்கள். முத்தத்தின் மூலம் நச்சென்று காதலை உணரவைத்து விடுவதில் இவர்கள் கில்லாடி.

ரிஷபம்

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவ ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் காதல் மனநிலையில் இருப்பார்கள். நெருக்கமான தருணங்களில் தங்களின் அன்பானவர்களுக்கு அடிக்கடி உதட்டில் சூடாக ஒரு முத்தம் கொடுத்து விடுவார்கள். அடிக்கடி முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வார்கள். காதல் கலையில் இவர்கள் கில்லாடிகள். சத்தமிடாமல் முத்தமிடுவதில் இவர்கள் சாகசக்காரர்கள்.

மிதுனம்

மிதுனம்

புத்தி நாதன் புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே அறிவாளிகள் இந்த ராசிக்காரர்கள், இவர்களுக்கு முத்தக்கலை தெரியாத விசயம் என்றாலும் கொடுக்க ஆரம்பித்து விட்டால் பரவசப்படுத்திவிடுவார்கள். உலகத்தையே மறந்து தங்களின் அன்பானவர்களையும் முத்தத்தினால் மறக்கடித்து விடுவார்கள். கன்னத்தில் கொடுக்கும் மிகச்சிறிய முத்தத்தையும் கலை நயத்தோடு தந்து விடுவார்கள்.

கடகம்

கடகம்

சந்திரன் காதல் நாயகன், மனோகாரகன். சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு முத்தம் கைவந்த கலை. முத்தம் கொடுத்து உடல் முழுவதும் சிலிர்ப்பை ஏற்படுத்திவிடுவார்கள். கைகளினால் தங்களின் அன்பானவர்களை அடிமைப்படுத்தி கண்கள், காது மடல், கழுத்து என விதம் விதமாக ரகம் ரகமாக முத்தம் கொடுத்து அசத்தி விடுவார்கள். மனதாலும் உடலாலும் முத்தத்தால்

சிம்மம்

சிம்மம்

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் காதலில் நெருப்பாக செயல்படுபவர்கள். காதல் துணையை எப்போதும் முத்தத்தினால் ஈர்த்து தங்களின் வசம் தக்கவைத்துக்கொள்வார்கள். நெற்றியில் தொடங்கி உதடு வரை முத்தத்தினால் முழுவதுமாக வசப்படுத்திவிடுவார்கள். இவர்கள் தரும் முத்தத்தில் குளுமையை விட சூடு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

கன்னி

கன்னி

அறிவின் ஆற்றல் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே... இவர்களுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் கொடுக்கும் முத்தம் வித்தியாசமானதாக இருக்கும். அன்பானவர்களுக்கு முத்தம் கொடுக்கும் போது வித்தியாசமான முறைகளை கையாளுவார்கள். உங்கள் முத்தம் தனித்துவமானதாக இருக்கும்.

துலாம்

துலாம்

காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. நீங்கள் காதலில் ரசனையானவர்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு முத்தமும் ரசனையானதாக இருக்கும். அன்பானவர்களுக்கு அசராமல் முத்தம் கொடுப்பீர்கள். நீங்க விரும்பி கொடுக்கும் முத்தத்தை விட உங்களை விரும்பி தரும் முத்தம்தான் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வீரத்தின் நாயகன் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட நீங்கத்தில் கவர்ச்சிகரமான முத்தத்தில் ஆர்வமுடையவர்களாக இருப்பீர்கள். எதற்காகவும் யாருக்காகவும் பயப்பட மாட்டீர்கள். பயமறியா முத்தங்களை கொடுப்பதில் நீங்கள் வல்லவர்கள். துணையிடம் முத்தமிடுவதற்காக அனுமதிக்காக காத்திருக்க மாட்டீர்கள். மயக்க முத்தம் கொடுத்து அதை மருத்துவ முத்தமாக மாற்றுவதில் கில்லாடி நீங்கள்.

தனுசு

தனுசு

நெருப்பு ராசி தனுசு. குருவை அதிபதியாகக் கொண்ட நீங்கள் சுவாரஸ்யமான முத்தம் கொடுப்பதில் கில்லாடி. ஆழமான முத்தம் அழுத்தமாக கொடுப்பீர்கள். நீங்கள் கொடுக்கும் முத்தம் உங்கள் துணையை பரவசப்படுத்தும். முத்தம் கொடுத்து அன்பால் சீண்டுவீர்கள். உங்களிடம் இருந்து எதிர்பாராத வகையில் உங்கள் அன்பானவர்களுக்கு முத்தம் கிடைக்கும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள். நிமிடத்திற்கு நிமிடம் வித்தியாசமாக முத்தம் கொடுப்பதில் கில்லாடி. முத்தம் கொடுக்கும் போதும் சரி முத்தம் பெறும் போதும் சரி தனக்கு பிடித்தது போல முத்தம் கொடுப்பார்கள். சுவாரஸ்ய முத்தங்களை கொடுத்து அன்பானவர்களை அசத்துவார்கள். முத்தம் கொடுப்பதிலும் சரி பெறுவதிலும் சரி உயர்ந்த தரமான முத்தத்தை கொடுப்பார்கள்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி நாதனக் கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் மென்மையானவர்கள். உங்களைப் போலவே நீங்கள் கொடுக்கும் முத்தமும் மென்மையான, அழகானவர்கள் ஆழமான முத்தம் கொடுப்பீர்கள். உங்கள் அன்பானவர்களுக்காக உருகி உருகி முத்தம் கொடுப்பீர்கள். முத்தத்தினால் உதட்டில் புதிய பிணைப்பை உருவாக்குவீர்கள். நீங்கள் கொடுத்து உதட்டு முத்தத்தினால் உங்கள் அன்பானவர் வெப்பத்தில் தகித்து விடுவார்கள்.

மீனம்

மீனம்

நீர் ராசிக்காரர்கள், குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்க மற்ற ராசிக்காரர்களை விட முத்தம் கொடுப்பதில் சிறந்தவர்கள். அன்பான அமைதியானவர்கள். உங்களின் அன்பை நிலை நிறுத்த ஆழமாக முத்தமிடுவீர்கள். நீங்கள் விரும்பும் நபர்களுக்கு ரசனையான முத்தங்களைக் கொடுத்து முத்தக்கடலில் மூழ்கடிப்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+