சனிப்பெயர்ச்சி 2025: ஜென்ம சனியால் மீன ராசியினர் பயப்பட வேண்டாம்.. குரு நற்பலன்களை அள்ளி கொடுப்பார்
சனிப்பெயர்ச்சி 2025: மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனி முடிந்து ஜென்ம சனி தொடங்கவுள்ளது. பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த மீன ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு என்னென்ன நற்பலன்களை கொடுக்கப் போகிறது. எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.. (Sani Peyarachi for Meenam)
தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு (2025 Rasi palan meenam) புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதியன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். சொந்த ராசிக்கு முந்தைய ராசியில் சனி பகவான் இடம்பெயரும்போது விரைய சனி காலம் நடக்கும். அதற்கு அடுத்த இரண்டரை காலம் ஜென்ம சனி. அதாவது சொந்த ராசிக்கே சனி பகவான் இடம்பெயர்வார். அடுத்த இரண்டரை காலம் சொந்த ராசியின் அடுத்த ராசியில் சஞ்சரிப்பார் அதுதான் பாதசனி. இவ்வாறு ஏழரை சனி ஏழரை ஆண்டுகாலம் நீடிக்கும்.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி தொடங்குகிறது (Sani Peyarchi 2025 meenam). 2025 சனிப்பெயர்ச்சி மீனத்துக்கு எவ்வாறு உள்ளது, என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம் வாங்க...
மீன ராசிக்காரர்களுக்கு 12 ஆம் வீட்டில் அதாவது விரைய ஸ்தானத்தில் சனி பகவான் இருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பல்வேறு துன்பங்களைப் பட்டு விட்டீர்கள். முதலீடுக்காக வாங்கிய கடனுக்கு பெரிய தொகையை வட்டி கட்டும் சூழ்நிலை, குடும்பத்தில் நோய் நொடி துரத்திக் கொண்டிருந்திருக்கும். நிம்மதி, தூக்கம் இழந்து, ஒரு பிரச்னை முடிந்தால் அடுத்த பிரச்னை என பாரத்தை சுமந்து கொண்டிருக்கும் சூழ்நிலை இருந்திருக்கும். வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள்.
ராசியில் சனி பகாவன் தற்போது ஜென்ம சனியாக வருவதால் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். இதனால், எந்தவொரு செயலிலும் ரிஸ்க் எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில், உத்தியோகம், புதிதாக கிளைகள் துவங்குவது போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், கவனமாக இருக்க வேண்டும்.
அஷ்டம ஸ்தானத்தில் குரு பார்வை விழுவதால் யோகம் உண்டாகும். பத்தாம் இடத்தில் குரு வருவதால் பதவி உயர்வு கிடைக்கும். நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல சம்பளம் கிடைக்கும். குருவால் நல்ல பலன்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
இடம், வீடு, பூமி என எங்கு எப்போது பிரச்னை வரும் என்று சொல்லவே முடியாது. சம்பந்தமே இல்லாமல் பிரச்னை உருவாகும். உதாரணமாக, விற்ற பொருளில் கூட குறை இருக்கிறது என்று பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு ஒரு பிளஸ் என்றால் ராசியில் இருந்த ராகு ராசியில் இருந்து போய்விட்டது. இதனால், உங்களது கோபம், வீரியம், பிடிவாதம் ஆகியவை பெரிதாக காணப்படாது. நாம் நிறைய இழந்துவிட்டோம், தோற்றுவிட்டோம் என்ற வருத்தம் மட்டுமே மிச்சம் இருக்கும்.
ஆனால், சமயோஜிதமாக, சாதுர்யமாக செயல்பட்டால் உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் சுமாராக வாழ்க்கை நடக்கும். இதெல்லாம் ஒரு வருடம்தான். ஒரு வருடத்திற்குப் பிறகு ராசிக்கு குருவின் பார்வை வந்த பிறகு அனுகூலமாக பலன்கள் உண்டாகும். ஜென்ம சனி என்பது இரண்டரை காலம்.
ஆறாம் இடத்தில் கேது பகவான் நல்ல பலன்களை கொடுப்பதற்கு தயாராக உள்ளது. ஒரு வருட காலம் குறிப்பாக சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கும்போது மட்டும் பத்து மாத காலம் உங்களைப் பார்த்துக் கொண்டால் இழப்போ, அவமானமோ நேராது. புதனின் ராசிக்குள் சனி பகவான் சென்ற பிறகு மீன ராசிக்காரர்களுக்கு பல்வேறு அனுகூலன்கள் உண்டாகும். புதன் பாதகாதிபதியாக இருந்தாலும் சுகஸ்தானதிபதியாக வருவதால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
வருடத்தின் நடுவில் கூட குருவின் பார்வை வருவதால் சிலவிதமான முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களை இயக்கக்கூடிய நபர்கள் நல்ல நபர்களாக இருந்தால் நீ்ங்கள் கரையை கடந்துவிடலாம்.
தவிர்க்க வேண்டிய விஷயங்கள்: லைப் பார்ட்னர்களாக இருந்தாலும், வியாபார கூட்டாளிகளாக இருந்தாலும் அவர்கள் சொல்லக் கூடிய விஷயங்கள் சரியா, தேவையா என்று யோசித்து அப்போதே வேண்டாம் என்று சொல்லாமல், பிளஸ் என மைனஸ் என சொல்லி தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். நிதித் துறையில் இருப்பவர்களிடம் பாஸ்வேர்டு கொடுப்பது, யூஸர் ஐடி கொடுப்பது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள்: கவனம் சிதறாமல் உங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கேரியரை மாற்றலாம், வேறு பாதையில் செல்லலாம் போன்ற தவறான அறிவுரைகள் வரக்கூடிய காலகட்டம். தியானம், சமயோஜிதமாக செயல்படுவது நல்ல பலன்களை கொடுக்கும். நிதித் துறையில் இருப்பவர்கள், ஐடி துறையில் படிப்பவர்களுக்கு ஏறுமுகம் உண்டாகும்
பெண்கள்: குழந்தைகள் விஷயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். பூர்வீகத்தில் இருந்து வரும் திருமண வரன்கள் ஜூன், ஜூலை மாதம் வரை சரியான விஷயமா என்பதை தேர்வு செய்வது அவசியம். ஐந்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பதும். 12 ஆம் இடத்தில் ராகு இருப்பதும், ராகுவை செவ்வாய் அஷ்டம பார்வையாக பார்ப்பதால் இரவு நேரத்தில் குழப்பிக் கொள்ளாமல் உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரங்கள்: மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி என்பதால் வசதி வாய்ப்பிருந்தால் நரசிம்மர் யாகம் அல்லது ரிக் வேத யாகம் அல்லது சுதர்சன யாகம் செய்து கொள்வது நல்லது. வசதி இல்லையென்றால் தொடர் நரசிம்மர் வழிபாடு, நல தீர்த்தத்தில் நீராடி சனி பகவானுக்கு பிரீத்தி செய்து, மாற்றுத் திறனாளிகளுக்கு, துப்புரவுப் பணியாளர்களுக்கு அன்னதானம், உதவிகள் செய்வது, கடினமான உடல் உழைப்பை வெளிப்படுத்துவது நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications