ஜனவரி மாத ராசி பலன் 2024 : புத்தாண்டில் ராஜயோகம்..திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 ஆம் ஆண்டின் முதல் மாதம் ஜனவர். இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். ஜனவரி மாதத்தில் சூரியன், தனுசு ராசியிலும் மகர ராசியிலும் பயணம் செய்வார். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வை, கூட்டணியைப் பொருத்து மேஷம் முதல் கன்னி ராசி வரை பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? யாருக்கு ஜாக்பாட்டி அடிக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்கள் மாற்றம்: இந்த மாதம் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன. சூரியன் 15 நாட்கள் தனுசு ராசியிலும் பிற்பகுதியில் மகர ராசிக்கும் செல்கிறார். செவ்வாய் தனுசு ராசியில் பயணம் செய்வார். செவ்வாய் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். புதன் பகவான் விருச்சிகம், தனுசு ராசியில் பயணம் செய்யப்போகிறார். சுக்கிரன் விருச்சிகம், தனுசு ராசியிலும், சனி கும்ப ராசியிலும், ராகு மீன ராசியிலும், மேஷ ராசியில் குருவும் கன்னி ராசியில் கேதுவும் பயணம் செய்கின்றன.

January matha Rasi palan 2024 tamil Prediction for Mesham and Rishabam

மேஷம்: சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். சனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நன்மைகள் நடைபெறும் காலம்தான். வியாபாரம் களைகட்டும், சிலருக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாத பிற்பகுதியில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். சூரியன் 10ஆம் வீட்டிற்கு நகர்வதால் சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும், உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருப்பதால் பெண்களால் சிலருக்கு மனகஷ்டம் உண்டாகும். வியாபாரம் களைகட்டும், சிலருக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. ஞாயிறு சூரிய நமஸ்காரம் செய்யலாம். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும். கந்த சஷ்டி கவசம் கவலையை மறக்கச் செய்யும்.

ரிஷபம்: சூரியன் ராசிக்கு எட்டாம் இடத்தில் செவ்வாயுடன் பயணம் செய்கிறார். அஷ்டமத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கையினால் செலவுகள் அதிகம் வர வாய்ப்புள்ளது சிக்கனத்தை கடைபிடிக்கவும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் ஒன்பதாமிடத்திற்கு மாறுகிறார் பூர்வீக சொத்துக்களில் பங்கு கிடைக்கும், தாய் தந்தையரின் ஆசீர்வாதம் கிடைக்கும். தாய் மாமனால் சங்கடம் உண்டாகும், சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். குல தெய்வக் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாயுடன் இருப்பதால் பணவரவும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் எட்டாமிடத்திற்கு மாறுவதால் பக்கத்து வீட்டுக்காரர்களின் செயல்கள் மனதை சங்கடப்படுத்தும். பங்குச்சந்தை கமிஷன் வியாபாரம் விருத்தியாகும் மாத பிற்பகுதியில் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். தொழில் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, உங்களை விட பெரியவர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும்.

கடகம்: சூரியன் செவ்வாய் கிரகங்கள் கூட்டணி அமைத்து ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் பிறர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அலுவலகத்தில் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும். 15ஆம் தேதிக்கு மேல் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை விஷயமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். பண வருமானம் அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணம் மன அமைதியை ஏற்படுத்தும்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் ஐந்தாம் வீட்டில் செவ்வாயுடன் பயணம் செய்வதால் அப்பாவின் சொத்துக்களை பராமரிப்பு செய்வீர்கள். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் ஆறாமிடத்திற்கு வருவதால் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும், பிறரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். கண்டச்சனி காலம் என்பதால் வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கன்னி: சூரியன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாயுடன் இணைந்திருக்கிறார். 15ஆம் தேதிக்கு மேல் அடிக்கடி உல்லாசப் பயணம் செல்வீர்கள், அப்பாவின் சொத்துக்களை பராமரிப்பதற்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்த சகோதரர்களுடன் நல்லுறவு நீடிக்கும். வேலை வியாபாரம் விசயமாக செல்லும் வெளியூர் பயணம் லாபத்தைத் தரும். எதிரிகள் தொல்லை நீங்கும். வீடு, வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+