சக்கரத்தாழ்வார் ஜெயந்தி, மாங்கனி திருவிழா, ஆடி அமாவாசை - ஜூலை விஷேச தினங்கள்
ஜூலை மாதத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி, மாங்கனித்திருவிழா, ஆடி அமாவாசை என பல முக்கிய விஷேச தினங்கள் உள்ளன.
மதுரை: ஜூலை மாதத்தில் பல முக்கிய விஷேச தினங்களும், முகூர்த்த நாட்களும் உள்ளன. காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களை சூறைவிடுவார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் எந்த நாட்களில் முக்கிய விஷேச நாட்கள் உள்ளன. முகூர்த்த நாட்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

ஜூலை 2 செவ்வாய்கிழமை சர்வ அமாவாசை
ஜூலை 8 திங்கள் கிழமை ஆனித்திருமஞ்சனம். இன்று ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் தரிசனம் செய்தால் தொழில் போட்டியில் தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
• ஜூலை 10 புதன்கிழமை சக்கரத்தாழ்வார் ஜெயந்தி . இன்றைய தினம் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் செய்யலாம் சுதர்சன ஹோமம் செய்ய உகந்த நாள்.
•ஜூலை 14 மிருத்யுஞ்ச பிரதோஷம், ஜேஷ்டாபிஷேகம் அன்று அபிஷேகம் பிராத்தானை செய்ய நன்மைகள் நடைபெறும்.
•ஜூலை 16 செவ்வாய் குரு பூர்ணிமா இன்று ஆசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம் குருபூஜை செய்யலாம்.
•ஜூலை 27 ஆடிக்கிருத்திகை அம்பாளையும் இறைவனையும் வழிபடலாம்.
முக்கிய முகூர்த்த நாட்கள்:
•இந்த மாதத்தில் கிரகப்பிரவேசம், கிரக ஆரம்பம் செய்ய வேண்டாம். திருமணம், சீமந்தம், மாங்கல்யம் செய்ய, புது வண்டி வாங்க, வித்யாரம்பம், தொழில் தொடங்க கடன் வாங்க நல்ல நாட்கள். ஜூலை 4, 8, 11,15,28,29 கும்பாபிஷேகம் செய்ய நல்ல நாட்கள். காது குத்த நல்ல நாட்கள் ஜூலை 4,11.
02.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் நன்பகல் 1.30 மணி வரை அமாவாசையை முன்னிட்டு பில்லி, சூன்னியம், செய்வினை தோஷங்கள் அகலவும், வியாபாரம் செழிக்கவும், எதிரிகள் தொல்லை அகலவும், பதவியில் உயர்வு கிடைக்கவும், போன்ற பல்வேறு நன்மைகளுக்காக யக்ஞசொரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை மிளகாய் யாகமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது.
06.07.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, மற்றும் சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரத்தினார் ஏற்ப்படும் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் அகலவும், சனி பகவனின் அனுக்கிரகம் கிடைத்து வளமான வாழ்க்கை வாழவும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும் சனி சாந்தி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
08.07.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஷஷ்டியை முன்னிட்டு மன அமைதி கிடைக்கவும், செல்வ செழிப்பு உண்டாகவும், சக்திமிக்க ஆற்றல் கிடைத்து வெற்றி இலக்கை பெறவும், கடன்களுக்கு தீர்வும் கிடைக்கவும், நோய்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு ஷஷ்டி சத்ரு சம்ஹார ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications