ஜூலை மாத ராசி பலன் 2021: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும்
ஜூலை மாதத்தில் கடக ராசிக்காரர்களின் வீடுகளில் உற்சாகம் அதிகரிக்கும். வருமானம் பெருகும் மகிழ்ச்சி தேடி வரும். சந்தோஷம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: ஜூலை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது. இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ஆதாயங்கள் நிறைந்த மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது. ஜூலை மாதம் வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் கடக ராசியிலும் சிம்மம், கன்னி ராசியிலும் பயணம் செய்வார். புதன் ரிஷபத்தில் மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார். செவ்வாய் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து ஜூலை மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

சிம்மம்
ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டங்கள் நடைபெறும். குரு பார்வை கூடி வந்துள்ளது. லாப ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் பயணம் செய்வது தொழில் வியாபாரத்தில் லாபத்தை கொடுக்கும். ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ள குருவின் பார்வை நேரடியாக உங்கள் ராசிக்கு கிடைப்பதால் காதல் கை கூடி வரும். திருமண சுப காரிய முயற்சிகள் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைந்திருப்பதால் பண வரவு வந்தாலும் கூட சுப விரைய செலவுகளும் கை கூடி வரும். மாத பிற்பகுதியில் சூரியன் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் உங்கள் ராசிக்கு வருகிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் உள்ள செவ்வாயின் மீது விழுவதால் வீடு, நிலம் வாங்கும் யோகம் வந்துள்ளது. சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் படிப்பு விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். திருமண பேச்சுவார்த்தைகள் கை கூடி வரும். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். பதவி யோகம் கை கூடி வரும் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு பயணம் செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல நேரம் கூடி வந்துள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் நன்மைகளும், நல்ல விசயங்களும் அதிகம் நடைபெறும் மாதமாக பண வரவு அதிகம் கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு ஜூலை மாதத்தில் சாதகங்கள் அதிகம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் ராசிநாதன் புதன் 10ஆம் வீட்டிற்கு வந்து ஆட்சி பெற்று சஞ்சரிப்பது சிறப்பு. சூரியன் புதன் இணைந்து தொழில் ஸ்தானத்தில் பயணிப்பதால் பதவி யோகம் கை கூடி வரும். புதன் பத்ரா யோகம் பெற்று சஞ்சரிக்கிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சனியின் பார்வையில் செவ்வாய் சுக்கிரன் பயணிப்பதால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குரு ஆறாம் வீட்டில் பயணிப்பதால் திருமணம், புத்திரபாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். திருமணம் பற்றி இப்போது பேச வேண்டாம். அதே நேரத்தில் வேலையில் புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. புதிய முயற்சிகள் கை கூடி வரும். புதிய பிசினஸ் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 11ஆம் வீட்டில் பயணம் செய்வதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இந்த மாதம் மருத்துவ செலவுகள் வந்தாலும் உடலில் இருந்த நோய்கள் நீங்கும். உடலில் ஏற்பட்டிருந்த அசதியும் மந்தநிலையும் நீங்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். புதிய முயற்சிகளை மாத முற்பகுதியிலேயே வெற்றிகரமாக செய்யத் தொடங்குங்கள் நன்மைகள் நடைபெறும். பெரிய அளவில் கடன் வாங்க முயற்சி செய்யாதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. கடந்த மாதங்களில் நிறைய கஷ்டப்பட்டீர்கள் இந்த மாதம் நினைத்த காரியம் கை கூடி வரும். தடை தாமதங்கள் நீங்கும். வேலையில் புதிய முயற்சிகள் கை கூடி வரும். பாக்யங்கள் நிறைந்த மாதம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை வேலையில் இடமாற்றத்தை தருவார். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் எதிர்பார்ப்புகள் கை கூடி வரும் 17ஆம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு வந்து அமர்ந்து குரு பார்வை பெறுகிறார். செவ்வாயும் இடப்பெயர்ச்சியாகி லாப ஸ்தானத்திற்கு வந்து சுக்கிரன் உடன் இணைவதால் திருமணம் சுபகாரியங்கள் வெற்றிகரமாக முடியும். புதனின் சஞ்சாரம் மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது. கேட்ட கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். கேது இரண்டாம் வீட்டில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் வண்டி வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். புத்திரபாக்கியம் கை கூடி வரும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அதிகம் சாதகமாக உள்ளது. சூரியன் சஞ்சாரம் மாத பிற்பகுதியில் சாதகமாக உள்ளது. நீங்க பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்கப் போகிறது. வேலை வாய்ப்பு, வருமானம் இந்த மாதம் நன்றாக இருக்கும். செய்யும் தொழில் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய்கள் நீங்கும் காலமாக உள்ளது. குரு பார்வையும், செவ்வாய், சுக்கிரன்,புதன் கிரகங்களின் நகர்வும் சாதகமாக உள்ளது. நீண்ட நாட்களாக பட்ட கஷ்டங்கள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் நல்ல வருமானம் கிடைக்கும். குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். களத்திர காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் உங்களுக்கு இந்த மாதத்தில் திருமண முயற்சிகள் கை கூடி வரும். மாணவர்களுக்கு சாதகமான மாதமாக உள்ளது. உயர் படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல நேரம் காரணம் இந்த மாதம் புதனுக்கு குருவின் பார்வை கிடைப்பதால் யோகம் கை கூடி வந்துள்ளது. குடும்பம் குதூகலமாக இருக்கும். பெண்களுக்கு உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கேது உங்கள் ராசியில் இருப்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்வதால் உடல் நலப்பிரச்சினைகள் வந்தது. இந்த மாதத்தில் நோய்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் ஜூலை மாதம் ஆதாயங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications