ஜூலை மாத ராசி பலன் 2022: வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
நவகிரகங்களின் சஞ்சாரம் இடமாற்றத்தால் ஜூலை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வையினால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜூலை மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மூன்றாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் குரு, ஐந்தாம் வீட்டில் ராகு, செவ்வாய், ஆறாம் வீட்டில் சுக்கிரன் ஏழாம் வீட்டில் புதன், சூரியன், என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டின் மீது விழுகிறது. தொழில், வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சூரியன், புதன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. புதன் வீடான கன்னி ராசியை குரு நேராக பார்ப்பதும், குருவின் வீடான தனுசு ராசியை புதன் நேராக பார்ப்பதும் சிறப்பு.

வேலையில் மாற்றம்
புதன், சூரியன், குருவின் சஞ்சாரம் வலுவாக உள்ளதால் சிலரது வேலையில் மாற்றம் ஏற்படும். வேலையில் புரமோசன், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களின் செயல்களில் வேகம் அதிகரிக்கும். காரிய வெற்றி உண்டாகும் சாதகமான மாதமாக அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் புதன், சூரியன் எட்டாம் வீட்டிற்கு மாறுவதால் புதிய முயற்சிகள் வேண்டாம் வெற்றிகளை தவறவிட வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் உற்சாகம்
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். ஜூலை மாதத்தில் புது ஜோடி சேரும் என்றாலும் மாத பிற்பகுதியில் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சனிபகவான் மீண்டும் வக்ரமடைந்து மகர ராசிக்கு வருவதால் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். ஆடி மாதத்தில் எந்த சுப காரியமும் வேண்டாம். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

ஆரோக்கியத்தில் அக்கறை
மாணவர்களுக்கு சாதகமான மாதம். உயர்கல்வி விசயமாக மாதத்தின் முற்பகுதியில் நல்ல முடிவெடுப்பது நல்லது. மாத பிற்பகுதியில் தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உணவு விசயத்தில் கவனம் தேவை. காரமான உணவுகளைத் தவிர்க்கவும். சந்திராஷ்டம நாட்களில் உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அஜீரண கோளாறுகள், வாயு தொந்தரவுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. மூத்த குடிமக்களின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மொத்தத்தில் இந்த மாதம் நன்மையும் தீமையும் கலந்த மாதமாக தனுசு ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications