ஜூலை மாத ராசி பலன் 2022: குருவின் பார்வையால் குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர் யார்?
ஜூலை மாதத்தில் கடக ராசிக்காரர்களின் வீடுகளில் உற்சாகம் அதிகரிக்கும். வருமானம் பெருகும் மகிழ்ச்சி தேடி வரும். சந்தோஷம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: ஜூலை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது. உற்சாகம் நிறைந்த மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. வேலை தொழிலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கடகம்
பாக்ய ஸ்தானத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவது அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. கல்வி யோகம் தேடி வரப்போகிறது. புதிய திட்டங்களை தீட்டுவதற்கு ஏற்ற மாதம் என்றாலும் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பத்தாம் வீட்டில் உள்ள ராகு செவ்வாய் இணைவு வேலை, தொழிலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.

வேலையில் கவனம்
செய்யும் வேலையில் கவனமும் நிதானமும் தேவைப்படும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குருவின் பார்வை மூன்றாவது வீட்டின் மீது விழுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவு படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள் என்றாலும் பெரிய அளவில் பண முதலீடுகளைத் தவிர்க்கவும். கூட்டாளிகளுடன் இணக்கமான போக்கினை கையாளவும். மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு வருவதால் வியாபாரம், தொழில் வளர்ச்சியடையும்.

பண முதலீடுகள்
சுக்கிரன் லாப வீட்டில் பயணம் செய்வதால் செய்யும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். சுக்கிரனின் பார்வை ஐந்தாம் வீட்டின் மீது விழுகிறது. குருவின் பார்வையும் ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நினைத்த இடத்தில் உயர்கல்வி படிக்க யோகம் உண்டாகும்.

பண வரவு
நிதிப்பற்றாக்குறை நீங்கும். பண வரவு அதிகரிக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெற நேரம் கைகூடி வந்துள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வந்து பரஸ்பரம் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உறவுகளிடையே பேச்சு இனிமையாகும்.

நோய்கள் நீங்கும்
சூரியன் புதனுடன் இணைந்து பயணம் செய்வதால் திடீர் பண வரவு வரும். பங்குச்சந்தைகளில் செய்யும் முதலீடுகள் லாபத்தை தரும். சேமிப்பும் கூடும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். நோய் பற்றிய பயமும் பதற்றமும் முடிவுக்கு வரும். திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள். ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு என்று பாடப்போகிறீர்கள். விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றி கிடைக்கப் போகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications