ஜூலை மாத ராசி பலன் 2022: குரு தரும் யோகம்..யாருக்கு சாதகமாக இருக்கும் தெரியுமா?
ஜூலை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு நவகிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: ஜூலை மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது. ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வையினால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் பொருளாதார நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொறுத்து கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு இந்த மாதம் நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் அமர்ந்துள்ள சனிபகவான் ஆட்சி பெற்று மீண்டும் 12ஆம் வீட்டிற்கு திரும்புகிறார். இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் செவ்வாய், ராகு, நான்கில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் புதன், சூரியன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மாத பிற்பகுதியில் சூரியன், புதன் ஆறாம் வீட்டிற்கு பயணம் செய்வார். இந்த மாதம் எதுவும் புதிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம். மாத முற்பகுதியில் நல்ல நிலை இருந்தாலும் மாத பிற்பகுதியில் புதிய முயற்சிகள் தேவையில்லை.

பண வரவு
குரு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் பண வரவு வரும். திருமண சுபகாரியம் தொடர்பாக பேசுவதற்கு இது சாதகமான மாதம் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதால் வரன் பேசி முடிவு செய்யலாம். மாளவியா யோகம் கை கூடி வரப்போகிறது. மனதிற்குள் காதல் மணியடிக்கும் காதலிப்பவர்கள் பேசி வீட்டில் பேசி சம்மதம் கேட்க மாத முற்பகுதியில் பேசி முடிவு செய்யலாம்.

குடும்பத்தில் சண்டை
ஏழரை சனி காலமாக இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். அதிகமாக பேச்சுக்கள் வேண்டாம் குடும்பத்தில் கூடுமானவரை மவுன விரதம் இருப்பது நல்லது. காதலிப்பவர்களுக்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம் தவிர்க்கவும். புதிய வேலைக்காக முயற்சி செய்வர்களுக்கு மாத முற்பகுதி சாதகமாக உள்ளது. அந்த கால கட்டத்தில் முயற்சி செய்வது நல்லது.

ஆரோக்கியத்தில் கவனம்
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவதற்கு இது ஏற்ற காலமல்ல. மாத பிற்பகுதியில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்சினை அஜீரணக்கோளாறுகள் வரலாம். புதிய முதலீடுகள், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இப்போது இருக்கிற வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். சனியால் பாதகமில்லை என்றாலும் விழிப்புணர்வோடு இந்த மாதத்தை கடக்க வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications