ஜூலை மாத ராசி பலன் 2022: தடைகளை உடைத்து வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?

நவகிரகங்களின் பயணத்தால் ஜூலை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை மாதத்தில் நிறைய யோகங்கள் மக்களுக்கு கிடைக்கப்போகின்றன. அற்புதமான சுப காரியங்கள் நடைபெறப்போகிறது. நவ கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். மீன ராசியில் குரு பகவானும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.

இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூலை மாதத்தில் மாத முற்பகுதியில் எட்டாம் வீட்டில் புதன் சூரியன் பயணம் செய்கின்றனர். நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் செவ்வாய் ராகு, ஏழாம் வீட்டில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. காதல் மனைவி உடனான சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொருளாதார வளம் நிறைந்த மாதமாகும்.

வேலையில் கவனம்

வேலையில் கவனம்

எட்டில் சூரியன் புதனோடு இணைந்துள்ளதால் வேலை விஷயத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வு அவசியம். 17ஆம் தேதிக்கு மேல் சூரியன் இடப்பெயர்ச்சியாகி கடக ராசிக்குள் நுழைகிறார். 9ஆம் வீட்டில் சூரியன் பயணிக்கும் காலத்தில் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலையில் இருந்த சிக்கல்களை தீர பொறுமை அவசியம். பண விவகாரங்களில் கவனம் தேவை. புது தொழில் முதலீடுகளை மாத பிற்பகுதியில் செய்வது நல்லது.

குருவின் பார்வையால் குதூகலம்

குருவின் பார்வையால் குதூகலம்

ஐந்தில் குரு பூர்வ புண்ணியம் அதிகரிக்கும். முடிவு எடுப்பதில் தெளிவு பிறக்கும். குருவின் பார்வையால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். கனவுகள் பலிக்கத் தொடங்கும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும். சொத்து வாங்கலாம்,மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்காக லோன் அப்ளை செய்யலாம். திருமணம் சுபகாரியங்கள் தொடர்பாக ஏற்பட்ட தடைகள் விலகும். முயற்சிகளுக்குப் பிறகு காரிய வெற்றி உண்டாகும்.

ஆரோக்கியத்தில் அக்கறை

ஆரோக்கியத்தில் அக்கறை

ராசிநாதன் செவ்வாய் ஆறாம் வீட்டில் ராகு உடன் பயணம் செய்வதால் சில நோய் பாதிப்பு வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. கண்களில் எரிச்சல் பாதிப்பு வரலாம்.. உயர்கல்விக்காக முயற்சி செய்யும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முயற்சி செய்வது நல்லது. சனி நான்காம் வீட்டில் இருப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். மொத்தத்தில் ஜூலை மாதத்தில் சின்னச் சின்ன தடைகள் ஏற்பட்டாலும் அதை வெற்றிகரமாக முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+