ஜூலை மாத ராசி பலன் 2022..எந்த ராசிக்காரங்களுக்கு யோகம் தேடி வரும்..வருமானம் அதிகரிக்கும்
ஜூலை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது. ஜூலை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.
சென்னை: ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் மிதுனம், கடகம் ராசியில் பயணம் செய்வார். சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் யோகங்கள் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. இதுநாள்வரை ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது.
ஜூலை மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார். சந்திரன் மாத முற்பகுதியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. நீங்கள் சாதிக்கப்பிறந்தவர்கள். சுக்கிரன் ஆட்சி பெற்று மாளவியா யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தில் குரு, விரைய ஸ்தானத்தில் ராகு செவ்வாய், இரண்டாம் வீட்டில் புதன், சூரியன், மாத பிற்பகுதியில் சூரியன் மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். சனி வக்ரம் பெற்று பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் கேது பயணம் செய்கிறார். கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது.

பெண்களுக்கு யோகம்
பெண்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் மாதமாக உள்ளது. பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். வரன் பார்ப்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தெய்வ அனுகூலம் நிறைந்த வாரம். காதல் கைகூடி வரும். மாணவர்களுக்கு முன்னேற்றகரமான மாதம். கல்லூரி படிப்பவர்களுக்கு இது வேலை கிடைப்பதற்கான ஏற்ற மாதம்.

வேலை மாற்றம் ஏற்படும்
ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்யும் கிரகங்களினால் வேலை மாற்றம் ஏற்படும். நல்ல வேலை கிடைக்கும். லாபாதிபதி குருபகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு.. நல்ல பொருளாதார லாபம் வரும். மிகச்சிறந்த மேன்மைகள் உண்டாகும். புரமோசனும் சம்பள உயர்வும் வரும். உயரதிகாரிகளின் நெருக்கமும் ஆதரவும் கூடும். சகோதரர்களிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

திருமண யோகம் கைகூடும்
மகனுக்கோ, மகளுக்கோ திருமண யோகம் கை கூடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆட்சி பெற்ற செவ்வாயினால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார வளம் ஏற்படும். செலவுகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத்தேவை நீங்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

வெற்றிகள் தேடி வரும்
செயல்களில் வேகம் அதிகரிக்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். அமோகமான வெற்றிகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு அற்புதமான காலம். விருதுகள் தேடி வரும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். துன்பம் தொலைந்தது இப்போ என்று பாடுவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண் தெய்வ வழிபாடு செய்வது அவசியம். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது சிறப்பு.












Click it and Unblock the Notifications