ஜூலை மாத ராசி பலன் 2023: வெற்றி மீது வெற்றி யாருக்கு தேடி வரும்.. சனி தரும் படிப்பினை யாருக்கு?
சென்னை: ஆங்கில மாதத்தில் ஏழாவது மாதம் ஜூலை மாதம். நவ கிரகங்களின் தலைவன் சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் ஜூலை மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. தனுசு, மகரம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு பகவான் ராகு பகவான், ஏழாம் வீட்டில் சூரியன், புதன், ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. 3வது வீட்டில் உள்ள வக்ரம் பெற்ற சனியின் பார்வை என கிரகங்கள் சாதகமாக இருப்பதால் வேலையில் வெற்றி நடை போடுவீர்கள். வேலையில் இடமாற்றம் உண்டாகும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

வெற்றிகரமான மாதம்: பெண்களுக்கு மன நிம்மதி உண்டாகும். ஏழரை சனியால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக எத்தனையோ சிக்கல்கள் பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள் இனி சாதகமான காலமாக அமைந்துள்ளது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு சாதகமான நல்ல செய்திகள் தேடி வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்களிடம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் இளைய தலைமுறையினர் வரன் பார்க்கத் தொடங்கலாம். கணவன் மனைவி இடையே வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமும் வெற்றியும் உண்டாகும். மாணவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். போட்டித்தேர்வினை தைரியமாக எதிர்கொள்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேர்வு எழுதிய மாணவர்கள் வெற்றியை ருசிப்பீர்கள்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். நான்காம் வீட்டில் குரு, ராகு இணைந்திருக்க ஆறாம் வீட்டில் சூரியன் புதன் மாத முற்பகுதியில் பயணம் செய்கின்றனர். எட்டாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் இணைந்திருக்கின்றனர். பத்தாம் வீட்டில் கேது பயணம் செய்கிறார். எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்து வரும் உங்களுக்கு இனி பிரச்சினைகள் நீங்கப்போகிறது. பாத சனி நீடிக்கிறது. சனிபகவானின் வக்ர காலத்தில் நீங்கள் நினைத்தது நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்கும். நல்லதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளவும்.
தொழிலில் கவனம்: மாத பிற்பகுதியில் சூரியன் ஏழாம் வீட்டிற்கு வந்து புதனோடு பயணம் செய்கிறார். பிடிக்கவில்லையே என்று வேலையை மாற்ற வேண்டாம். பிசினஸ், தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். குடும்பத்தில் காரசாரமான விவாதங்கள் வந்து போகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் வரன் தேடி வரும். இடைஞ்சல்களும் தடைகளும் வரும். பெண்களுக்கு வேலையில் ஒருவித சலிப்பு வந்து போகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். உணவு விசயத்தில் கவனம் தேவைப்படும். இரவு நேரங்களில் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கவனம் தேவைப்படும் காலம். குழப்பமான கால கட்டத்தில் இருப்பீர்கள் படிப்பில் கவனம் தேவைப்படும். மொத்தத்தில் மகர ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தை கவனத்தோடு கடந்து விடுவது நல்லது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications