ஜூலை மாத ராசி பலன் 2023: காதலில் வெற்றி.. கல்யாண வரம்.. ராஜாதி ராஜ யோகம் யாருக்கு?
சென்னை: ஜூலை மாதம் அற்புதமான மாதம். ஆனியும் ஆடியும் இணைந்த மாதம். சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் ஜூலை மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. கடக ராசிக்காரர்களுக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கும் ராஜாதி ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ஜூலை மாத பலன்களை விரிவாக பார்க்கலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. வேலை தொழிலில் வக்ரமடைந்த சனி பகவான் எந்த அளவிற்கு உதவி செய்வார் என்று பார்க்கலாம். தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகள், ஊக வணிகத்தில் நிதானம் அவசியம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். மாத முற்பகுதியில் சூரியன் 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் ஜென்ம ராசிக்கும் சூரியன் வருகிறார். தடைகளை தாண்டி முன்னேற்றம் உண்டாகும். இரண்டாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய் மீது சனியின் பார்வை விழுகிறது.

திருமணம்: காதலிப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். சின்னச் சின்ன செல்ல சண்டைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இல்லாவிட்டால் பிரிவில் போய் முடிந்து விடும். உறவுகளுக்கிடைய பிரச்சினை வர வாய்ப்புள்ளது. திருமணம் சுப காரியங்கள் ஆவணி மாதத்திற்கு மேல் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. கடக ராசிக்கு வரப்போகும் புதன் புத்திசாலித்தனத்தை அதிகரிப்பார். நிறைய அனுபவங்கள் உண்டாகும்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளை புன்னகையோடு சுமப்பீர்கள். உடற்பயிற்சி அவசியம்.
ஆரோக்கியம்: மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான ஞானம் உண்டாகும். சூரியனும், புதனும் இணைந்து யோகத்தை கொடுப்பதால் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்களின் ஆலோசனைகளை, ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் அவசியம். வயதானவர்கள் கவனமாக இருப்பது நல்லது. சொத்துக்கள், பணம் விவகாரங்களில் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. வாயுபுத்திரன் அனுமனை வணங்க நோய், விபத்துகள் ஏற்படாமல் தப்பிக்கலாம். நோயுடன் இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்குள் செவ்வாய் பயணம் செய்ய ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதியில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்கள் ராசியில் பயணம் செய்யப்போகும் செவ்வாய் சுக்கிரன் கூட்டணிக்கு குருவின் பார்வை கிடைப்பது யோகம். பதவி அதிகாரம் தேடி வரும் காலம். எதிரிகள் தொந்தரவுகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். நேர்மறை எண்ணங்கள், நேர்மறையான செயல்கள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் கவனத்தோடு செய்ய வேண்டும்.

வெற்றிகள் தேடி வரும்: வெற்றி மீது வெற்றி வந்து சேரும். உங்கள் வளர்ச்சியைப் பார்த்து உங்கள் மீது கண் திருஷ்டி அதிகம் விழும். சுக்கிரன் பார்வை சனி மீது விழும் போது சனியின் தாக்கம் குறையும். திருமண சுபகாரியங்கள் தொடர்பாக முயற்சி செய்யலாம். வரன் பார்க்க தொடங்கலாம். காதலிப்பவர்களுக்கு கவலையான கால கட்டம். கண்டக சனி வக்ரசனியின் பார்வையால் கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும். உங்கள் வீட்டு விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம். திருமணமானவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் காலம்.
இல்லத்தரசிகள்: பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும். வேலை வேலை என்று அதீத வேலை செய்வீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். வயதானவர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஆலய தரிசனம் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும். புத ஆதித்யா யோகம் செயல்பட ஆரம்பிக்கிறது. மாணவர்களுக்கு நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். தேர்வுகளில் அற்புதமாக எழுதி வெற்றி பெறுவீர்கள். தேர்வுக்காக கடுமையாக உழைத்து படித்து வெற்றி பெறுவீர்கள். சிந்தனையும் செயலும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். உணவு விசயத்தில் அக்கறை காட்டுவது அவசியம். ஜூலை மாதத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.












Click it and Unblock the Notifications