ஜூலை மாத ராசி பலன் 2023: வேலையில் டிரான்ஸ்பர்.. புரமோசன்.. திடீர் ஜாக்பாட் யாருக்கு தேடி வரும்
சென்னை: ஆங்கில மாதத்தில் ஏழாவது மாதம் ஜூலை மாதம். நவ கிரகங்களின் தலைவன் சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் ஜூலை மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கன்னி: புதன் பகவானை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பயணம் சாதகமாகவே உள்ளது. ராசி நாதன் புதன் தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம் , விரைய ஸ்தானங்களில் பயணம் செய்வார். செவ்வாய் சுக்கிரன் இணைந்து விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வார்கள். சூரியன் லாப தொழில் ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். குரு பகவானும், ராகுவும் எட்டாம் வீட்டில் பயணம் செய்கின்றனர்.

சுப செலவுகள்: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்குமா என்று எதிர்பார்ப்பீர்கள். குரு சுக்கிரன் மறைவு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. இப்போதைக்கும் இருக்கும் வேலையை தொடர்வது நல்லது. விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் பயணம் பண செலவுகளை அதிகரிக்கும். முடிந்த வரை சுப செலவுகளாக மாற்றுங்கள். திருமணம் சுப காரியத்திற்கு இது ஏற்ற காலமல்ல. காதலிப்பவர்களுக்கு இது கஷ்ட காலம்தான் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஊடல் அதிகரிக்கும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. விரைய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் செவ்வாய் மீது குரு பகவானின் பார்வை கிடைக்கிறது மகிழ்ச்சியான விசயம் என்றாலும் சனி பகவானின் பார்வையும் கிடைக்கிறது.
ஆரோக்கியத்தில் கவனம்: இல்லத்தரசிகள் கவனமாகவும் நிதானமாகவும் அடி எடுத்து வைப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். கஷ்ட காலம்தான் உடல் வலியோடு மன உளைச்சலும் அதிகரிக்கும். உறவுகளால் பிரச்சினைகள் வரும் என்பதால் பொறுமையாக கவனமாக கையாளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படும். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்து போகும். உணவு கட்டுப்பாடு அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் கவனமும் அக்கறையும் தேவை. உயர்கல்விக்காக அதிக செலவு செய்வீர்கள்.படிப்பிற்காக செலவுகள் அதிகரிக்கும். வங்கிக்கடன் வாங்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் ஜூலை மாதத்தில் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அமைதியும் நிதானமும் தேவைப்படும் மாதமாக அமைந்துள்ளது.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. இந்த மாதம் உங்கள் ராசி அதிபதி லாப ஸ்தானத்தில் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். அது சிறப்பான யோகத்தை தரப்போகிறது. புதனும் சூரியனும் பாக்ய ஸ்தானத்திலும் தொழில் ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். ஏழாம் வீட்டில் குரு உங்கள் ராசியை பார்க்கிறார். அற்புதமான கால கட்டம். கிரகங்கள் எல்லாமே உங்களுக்கு சாதகமாக உள்ளதால் புது வேலை கிடைக்கும். வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேர்மறையான விசயங்கள் அதிகம் நடைபெறும். சில நேரங்களில் திடீர் ஜாக்பாட் அடிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டசிக்கல்கள் நீங்கும். திருமணம் சுப காரியத்திற்காக முயற்சி செய்வது நல்லது. அதற்காக நிறைய போராட வேண்டியிருக்கும். காதலிப்பவர்கள் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். கலக்கம் நீங்கி தெளிவான மன நிலையில் இருப்பீர்கள்.
பெண்களுக்கு யோகம்: சுக்கிரன் நல்ல இடத்தில் பயணம் செய்வதால் தெளிவாக முடிவெடுப்பீர்கள். சின்ன சின்ன பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இல்லத்தரசிகளுக்கு இந்த மாதம் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொன்நகைகளை சேரும் காலமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் அதிக அக்கறை தேவைப்படும். மூத்த குடிமக்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினை வரக்கூடும் என்பதால் உணவுகளை நேரத்திற்கு சாப்பிடுங்கள். இரவு நேரங்களில் காரமான உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. மாணவர்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள ராசிநாதன் செவ்வாய் சுப கிரகமான சுக்கிரனோடு இணைந்து பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பத்தில் சுக்கிரன் பதவி யோகத்தை தரப்போகிறார். வேலை தொழிலில் இந்த மாதம் வருமானம் எப்படி இருக்கும் என்றால் பார்த்தால் அற்புதமாக இருக்கும். சனி, குரு, ராகு, கேது, சாதகமாக இல்லை. மாத முற்பகுதியில் சூரியன், புதன் எட்டால் வீட்டில் பயணம் செய்தாலும் மாத பிற்பகுதியில் சூரியன் புதன் இடமாற்றம் பாக்ய ஸ்தானத்திற்கு வரும் போது வருமானம் வரும். புது வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார ரீதியான தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முதலீடுகள் மூலம் வருமானங்கள் வரத் தொடங்கும். திருமணம் சுப காரிய முயற்சிகளில் தடைகள் வரலாம். பலமுறை யோசித்து வரன் பார்க்கலாம். அவசரப்பட வேண்டாம். காதலிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டமாக உள்ளது.
வேலையில் புரமோசன்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் இருப்பதால் புது வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் புரமோசனுடன் தேடி வரும். பெண்களுக்கு ஏதோ குழப்பம் இருக்கிறதே? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று யோசிப்பீர்கள். சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறதே என்று யோசிப்பீர்கள். போராட்டத்தை எதிர்கொண்டாலும் வெற்றி உங்களுக்குத்தான். உணவு விசயத்தில் கவனம் தேவைப்படும். சரியான உணவுகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். மாணவர்களுக்கு வெளியூர் வெளிநாடு சென்று தங்கி படிக்க யோகமான கால கட்டமாக உள்ளது. படிப்பில் நிதானமும் கவனமும் தேவைப்படும். மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications