ஜூலை மாத ராசி பலன்: குரு மங்கல யோகம்..ஜூலை மாதம் ஜோடி சேரும் மனசு..எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?
சென்னை: ஜூலை மாதம் அற்புதமான மாதம். ஆனியும் ஆடியும் இணைந்த மாதம். சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் உருவாகப்போகிறது. குரு மங்கல யோகத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. என்னென்ன யோகங்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் நேர்மறை சம்பவங்கள் அதிகம் நடக்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. சனி வக்ரமடைந்து பயணம் செய்கிறார். தொழில் காரகன் சனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கும்ப ராசியில் உள்ள சனி பகவான் மீது ராசிநாதன் செவ்வாய் பகவானின் பார்வை விழுகிறது. சனி செவ்வாய் சம சப்தமமாக பார்வை படுவதால் வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வக்ரமான சனி வேகத்தை அதிகரிக்கும். புதிய வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் துறையில் தனித்துவம் அடைவீர்கள்.

குரு பார்வை: காவல்துறை, ராணுவத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். செவ்வாய் பகவான் மீது குரு பார்வை விழுவதால் குரு மங்கல யோகமும் கிடைக்கிறது. வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கோபப்பட வேண்டாம் நிதானமாக பேசுங்கள். உங்களின் புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும்.
சுபகாரியம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பகவான் பார்வை கிடைப்பதால் நீங்கள் திருமண சுப காரியம் தொடர்பாக பேசி முடிக்கலாம். கணவன் மனைவி இடையேயான நெருக்கம் கூடும். காதல் மணியடிக்கும். காதலில் இருப்பவர்களுக்கு பெற்றோர்களின் உதவியோடு ஆசியோடு திருமணம் கை கூடி வரும். நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகளால் சந்தோஷ செய்திகள் தேடி வரும். குழப்பங்கள் நீங்கி இந்த மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இல்லத்தரசிகள்: பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான மாதமும். கணவர் அன்பான பரிசால் திக்குமுக்காட வைப்பார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்களுக்கு சாதகமான நிலையில் கிரகங்கள் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும் ஆரோக்கியத்தோடும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். ஜென்ம ராகு குருவுடன் இருப்பதாலும் கேது களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்தாலும் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் வரப்போவதில்லை. மூத்த குடிமக்கள் வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.
மாணவர்களுக்கு சிறப்பு: சூரியனுடன் புதன் இணைந்து பயணம் செய்வதாலும் நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதாலும் மாணவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். வெளிநாடு பல்கலைக்கழகம், வெளியூர் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். அரசு தேர்வுக்காக தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நவ கிரகங்களின் சஞ்சாரமும் பார்வையும் சாதகமாகவே இருக்கிறது. சூரியன், புதன் கூட்டணி உங்களுக்கு நல்ல செய்திகளை தரும். ஜூலை மாதத்தை மேஷ ராசிக்காரர்கள் உற்சாகத்துடன் கடந்து விடுங்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications