ஜூலை மாத ராசி பலன்: புது வேலை கூடவே புரமோசன்..பிருகு மங்கல யோகத்தால் அதிரடி மாற்றம் யாருக்கு?
சென்னை: ஜூலை மாதம் அற்புதமான மாதம். ஆனியும் ஆடியும் இணைந்த மாதம். சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் உருவாகப்போகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு பிருகு மங்கல யோகத்தால் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. என்னென்ன யோகங்கள் இந்த மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்: ஜூலை மாதம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு கிரகங்களில் நிலையை பார்த்தால் 2ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன், மூன்றாம் வீட்டில் ராசிநாதன் சுக்கிரன், 4ஆம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சனி, விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டில் ராகு, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சனி பகவான் பத்தாம் வீட்டில் வக்ரமடைவதால் செய்யும் செயல்களில் வேகம் ஏற்படும். செவ்வாய், சுக்கிரனின் பார்வை சனி பகவானுக்கு கிடைக்கப்போகிறது. குரு பகவானின் பார்வை சுக ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் சுக்கிரன், செவ்வாய்க்கு கிடைக்கும்.

விரைய குரு, ராகுவினால் நிறைய பண வருமானத்தை கொடுக்கும். அதே நேரத்தில் விரைய செலவுகளும் வரும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
புதன் பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சிறு தூர பயணங்கள் செல்வீர்கள். வேலைக்காக செல்லும் பயணம் வெற்றிகளைத் தேடி வரும். தொழில் செய்பவர்கள் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை.
கேந்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைவது யோகம். பிருகு மங்கல கைகூடி வரப்போகிறது. அந்த இடத்தை குருபகவான் பார்வையிடுவதால் வீடு வாங்கும் யோகம் வரும். சிலருக்கு வீடு இடமாற்றம் வரும். இடம் வாங்கி வீடு கட்ட தொடங்கலாம். சொத்து சேர்க்கை உண்டாகும். மாத பிற்பகுதியில் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவார். கூடவே புதனும் இணைந்து பயணம் செய்வதால் புத ஆதிபத்ய யோகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி தேடி வரும்.

திருமண சுபகாரியங்கள் தடைகளை தாண்டி வெற்றிகள் கிடைக்கும். ஆவணி மாதம் உங்களுக்கு அற்புதங்கள் நடைபெறும். காதலிப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். மாத இறுதியில் புதன் சிம்மராசியில் செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்வதால் குரு, சனி பார்வையும் கிடைப்பது உங்களுக்கு யோகமான கால கட்டம். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். மன அமைதியும் நிம்மதியும் தேடி வரும். காதல் கிரகங்களின் கூட்டணியால் காதலிப்பவர்கள் தெளிவாக சிந்திப்பீர்கள்.
பெண்கள், இல்லத்தரசிகளுக்கு அற்புதமான கால கட்டம். வாக்கில் சூடான கிரகம் பயணம் செய்வதால் வார்த்தைகளில் கவனம் தேவை. வீடு மாற்றம் இடம் மாற்றம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல மாதம் உயர்கல்விக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கண் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. உடல் சூடு அதிகரிக்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இந்த ஜூலை மாதத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அற்புத யோகத்தினால் புதிய மாற்றங்கள் உண்டாகும். உற்சாகமாக கடந்து விடுவீர்கள்.












Click it and Unblock the Notifications