ஜூலை மாத ராசிபலன்கள் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாற்று வீசும்
கடகம் ராசிக்காரர்கள் இந்த மாதம் உற்சாகமாக இருப்பீர்கள். காரணம் குருவின் பார்வை ராசியில் உள்ள செவ்வாய் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு தொழில் வாய்ப்பு, கல்வி திருமணயோகம் எப்படி என்று பார்க்கலாம்.
மதுரை: ஜூலை மாதம் செவ்வாய் உங்கள் ராசியில் அமர்ந்திருக்கிறார் , இது யோக காலம். தொழில் ஸ்தானதிபதி செவ்வாய் கடகத்தில் அமர்வது யோகம். மாதம் முழுவதும் உங்கள் ராசியில் இருப்பதால் சுய தொழில் யோகம் கூடி வரும் பிசினஸ் செய்பவர்களுக்கு புதிய சிந்தனைப் பற்றிய எண்ணம் தோன்றும்.
ஜூலை மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு ராசியில் செவ்வாய், புதன், ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ராகு ஐந்தாம் வீட்டில் குரு ஆறாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. 12ல் சுக்கிரன் சூரியன் இருந்தாலும் ராசி மீது குரு பார்வை விழுவதால் சுப விரையங்கள் ஏற்படும்.
வியாதிகளில் இருந்து நிவர்த்தியடையும். உறவுகள் அன்பால் உங்களை ஆதரிப்பார்கள். செலவு நிறைய இருக்கும் கூடவே வரவும் வரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொருத்து கடகம் ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமண யோகம் எப்படி என்று பார்க்கலாம்.

அன்பும் பாசம் கூடும்
கடக ராசியில் செவ்வாய் நீசம் பெற்று இருக்கிறார். 4 ஆம் தேதி கடகம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் செவ்வாய் பலம் பெற ஆரம்பிப்பார். காதல் விவகாரங்கள் வெற்றி பெறும். மாத முதல் வாரத்தில் செவ்வாய் சந்திரன் இணைகிறார். செவ்வாய் உங்க ராசிக்கு முக்கியமானவர். கடகத்தில் நீசமாக சஞ்சரிக்கிறார் பலஹீனமடைகிறார். 4 மற்றும் 5 ஆம் தேதியில் சந்திரன் இணையும் போது அன்பும் பாசமும் அதிகரிக்கும். கடகம் இந்த மாதம் உற்சாகமடைய காரணம் குருவின் பார்வை செவ்வாய் மீது விழுகிறது. விருச்சிகத்தில் இருந்து கடகத்தை குரு பார்க்கிறார். செவ்வாய், சந்திரன், குரு இந்த மாதம் உங்களை காப்பாற்றும். ராகு கேது வினால் இந்த மாதம் இடையூறு இல்லை

பணவருமானம்
தொழில் ஸ்தானதிபதி செவ்வாய் கடகத்தில் அமர்வது யோகம். மாதம் முழுவதும் உங்கள் ராசியில் இருப்பதால் சுய தொழில் யோகம் கூடி வரும் பிசினஸ் செய்பவர்களுக்கு புதிய சிந்தனைப் பற்றிய எண்ணம் தோன்றும். முருகனை வழிபட செய்தொழில் சிறப்படையும். பொருட்களை அதிகம் வாங்கி ஸ்டாக் வைக்க வேண்டாம். ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும். உங்களின் பணவருமானம் இருந்தாலும் நிறைய தடைகள் வரும் செலவுகளும் அதிகரிக்கும்.

உடல்நலனில் அக்கறை
இரண்டாம் அதிபதி சூரியன் 17ஆம் தேதிக்கு மேல் உங்கள் ராசிக்கு வரும் போது பணவருமானம் அதிகரிக்கும். சூரியன் சனி பார்க்கும் இந்த காலகட்டத்தில் கவனம். நெருங்கிய நண்பர்களின் உடல்நலனிலும் உங்க உடல்நலனிலும் அக்கறை காட்டுங்கள். கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடலாம்.

திருமணம் கைகூடும்
படிக்கும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும். அளவாக முதலீடு செய்யுங்கள். சுக்கிரன் 23ஆம்தேதி வரை சாதகமாக இருக்கிறார். வேலை விசயமாக செய்யும் முயற்சி கைகூடி வரும் வேலை கிடைக்கும். 24ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் உங்க ராசிக்கு வருகிறார். யோக காலம் குழந்தை பாக்கியம் திருமணமான பெண்களுக்கு கை கூடி வரும்.

எச்சரிக்கை தேவை
ஆறில் சனி, கேது ராசியில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் சில ஏமாற்றங்களையும் நம்பிக்கை மோசடிகளையும் சந்திக்க நேரலாம். அதிகமாக கடன் வாங்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்ய வேண்டாம் அப்புறம் தண்டனை கிடைக்கும். மாத இறுதியில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கூடவே குரு பார்வை இருக்கிறது. இந்த கால கட்டத்தில் பெண்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள். குரு பகவான் பார்வை உங்களை காப்பாற்றும் எனவே பெரியவர்களின் அறிவுரைகளை கேட்கவும். கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. ஆண் நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.
தடைகள் நீங்க பாதிப்புகள் குறைய கந்த சஷ்டி கவசம் படிங்க.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications