ஜூலை மாத ராசிபலன்கள் 2019: மிதுன ராசிக்காரர்களே வெற்றிகள் கைகூடி வரும்
மதுரை: ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு வெற்றிகளும் யோகங்களும் தேடி வரப்போகிறது. உங்கள் ராசியில் இணைந்துள்ள சூரியன், சுக்கிரன் ராகுவினால் நன்மைகள் நடைபெறப்போகின்றன. உங்கள் வார்த்தைகளை இந்த மாதம் கவனமாகப் பயன்படுத்துங்கள் ஏனென்றால் அதுதான் உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிடும்.
இந்த ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்கள் ராசிக்குள் சூரியன், சுக்கிரன் ராகு மாத தொடக்கத்தில் இணைந்திருக்கின்றனர். மாத பிற்பகுதியில் சூரியனும், சுக்கிரனும் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு மாறுகின்றனர். இப்போது ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய், புதன் சஞ்சாரம் உள்ளது. ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொருத்து மிதுனம் ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமண யோகம் எப்படி என்று பார்க்கலாம்.

அவசரம் வேண்டாம்
ராசியில் உள்ள சுக்கிரன், சூரியன், ராகு. ராகு குழப்பத்தை கொடுத்தாலும் உற்சாகத்தை தருவார். முகப்பொலிவு ஏற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும். சனி பார்வை மிதுனத்தின் மீது விழுகிறது. கேதுவும் பார்ப்பதால் உற்சாகம் குறைவாக இருக்கும். ஏதோ தடை ஏற்படும். நடக்கிற வேலைகள் எல்லாம் ஸ்லோவாகவே இருப்பார். அவசரப்பட வேண்டாம்.

வார்த்தைகளில் கவனம்
ராசிநாதன் புதன் சந்திரன் வீட்டில் செவ்வாய் உடன் இணைந்திருப்பதால் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். அடிக்கடி கோபம் வரும். உணர்ச்சிவசப்பட்டு நிதானத்தை இழக்க வேண்டாம். தியானம் செய்யுங்கள். செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் இரண்டாம் வீட்டில் இருப்பதால் யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உறவுகளுட்ன் பகை வேண்டாம் சண்டைகளை தவிருங்கள். நெருப்பு வார்த்தைகள் உங்களுக்கு தொல்லைகளை ஏற்படுத்தும் ராசியில் சுக்கிரன் இருப்பதால் முகத்தில் பொலிவு கூடும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் தேடி வரும்.

பெரியவர்கள் ஆலோசனை
ஆறாம் வீட்டில் குரு வக்ரமடைந்திருக்கிறார் குரு ஆறாம் வீட்டில் இருப்பதால் தடைகள் தாமதங்கள் ஏற்படுகிறது. எதிர்ப்புகள் வலுக்கும். பெரியவர்கள் ஆலோசனையுடன் எதையும் தேர்வு செய்யுங்கள். வாகன போக்குவரத்தில் கவனம், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம்.

வெற்றிகள் கைகூடும்
ஏழாம் வீட்டில் சனி கேது. அரசு விருதுகள் கிடைக்கும். தந்தையாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பணியிட மாற்றம் கிடைக்கும் மிகச்சிறந்த வெற்றிகள் தேடி வரும் மாதம் தைரிய ஸ்தானதிபதியால் நன்மைகள் நடைபெறும்.

விட்டுக்கொடுங்கள்
பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும். பிரம்மாண்ட யோகம் தேடி வரும். வார்த்தைகளில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அரசு விருதுகள் தேடி வரும் பிசினஸில் பிரம்மாண்ட வளர்ச்சி தேடி வரும். டிரான்ஸ்பர் கிடைக்கும்.

கண்டச்சனி கவனம்
கடன்கள் அடைபடும் புதிய கடன்கள் வாங்காதீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும் வெளிநாடு சென்று படிக்கலாம். கல்விக்கடன்கள் கிடைக்கும். கண்டகச்சனி இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் தடைகள் இருக்கும் என்றாலும் கவலை வேண்டாம்.

பதவிகள் தேடி வரும்
உங்கள் ராசியில் உள்ள சூரியன், சுக்கிரன் ராகு கூட்டணி 17ஆம் தேதிக்கு மேல் பிரிகிறது. 17ஆம் தேதி சூரியன் கடகம் ராசிக்கு நகர்ந்து செவ்வாய் உடன் இணைகிறார். சுக்கிரன் 24ஆம் தேதி முதல் புதன் செவ்வாயுடன் இணைகிறார். இந்த மாதம் லாபங்கள் கிடைக்கும். அரசு விருதுகள் மாத முற்பகுதியில் கிடைக்கும் யோகம் கைகூடி வருகிறது. அரசு மூலம் சில நல்ல பதவிகள் தேடி வரும். அப்பா பையன் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதுமைகளை செய்வீர்கள். சாதனைகள் செய்யும் வாய்ப்புகள் தேடி வரும். மிகச்சிறந்த மேன்மைகள் உருவாகும் மாதம் இதுவாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications