ஜூலை மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு

ஜூலை மாதம் ரிஷப ராசிக்காரர்களே சந்தோசம் பொங்குதே என்று பாடப்போகிறீர்கள் காரணம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் வருமானங்கள், அதிர்ஷ்டம் வரப்போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களின் சந்தோசத்தை அதிகரிக்கப்போகிறது. இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்கள் தினசரியும் மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு மாறும் குரு, இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை மாறும் சனி, மாதந்தோறும் மாறும் சூரியன், புதன், சுக்கிரன், தினசரியும் மாறும் சந்திரன் என கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இந்த ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு மூன்றாம் வீட்டில் செவ்வாய், புதன் ஏழாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் சூரியனும் சுக்கிரனும் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகின்றனர். இந்த மாதம் கிரகப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்னென்ன சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

வசீகரம் அதிகரிக்கும்

வசீகரம் அதிகரிக்கும்

இந்த ஜூலை மாதத்தில் உங்களின் முக வசீகரமும் பொலிவும் கூடும். உங்கள் ராசிக்கு இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டமும் எதிர்பாரத வருமானம் கூடும் காரணம் இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன், சுக்கிரன் ராகுதான். மூன்றாம் வீட்டில் புதன் செவ்வாய் உடன் இணைந்திருப்பது ராஜயோகம். தொழில் ரீதியான வெற்றி கிடைக்கும். புதன் உங்கள் தனாதிபதி. புதன், செவ்வாய் மீது குரு பார்வை விழுவதால் பொழுது போக்கு சந்தோஷம் கூடும்.

செல்வத்தோடு செல்வாக்கு அதிகரிக்கும்

செல்வத்தோடு செல்வாக்கு அதிகரிக்கும்

உங்கள் தனாதிபதி புதனால் இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடைபெறும். 12 மற்றும் ஏழாம் வீட்டு அதிபதியுமான செவ்வாய் உடன் 2 மற்றும் 5ஆம் வீட்டு அதிபதியுமான புதன் இணைந்துள்ளதால் பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். புகழ் கூடும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல தன லாபம் கிடைக்கும். அஷ்டமத்தில் உள்ள சனியின் பார்வை உங்கள் தன ஸ்தானத்தின் மீது இருப்பதால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.

பெண்களுக்கு நன்மை

பெண்களுக்கு நன்மை

பெண்களுக்கு அதிக நல்லவைகள் நடைபெறும் மாதம் ராசி அதிபதி சுக்கிரனால் பெண்களின் பிரச்சினைகள் தீரும். பணம் கையிருப்பு அதிகரிக்கும். குரு பகவான் உங்க ராசியை பார்ப்பதால் பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சினைகள் தீரும் மனக்குறைகள் நீங்கும்.

சனியின் பார்வை 17ஆம் தேதி வரை சூரியன் மீது விழுகிறது. கடகம் ராசிக்கு சூரியன் மாறும் போது நன்மைகள் அதிகம் நடைபெறும். கணவன் மனைவி உறவில் சில உரசல்கள் வந்தாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். விட்டுக்கொடுத்து போங்கள். கண் பல்சார்ந்த பிரச்சினை வரும் மருத்துவரை அணுகவும்.

வெளிநாட்டு யோகம்

வெளிநாட்டு யோகம்

பள்ளி மாணவர்களுக்கு மிகச்சிறப்பான மாதம். நல்ல வாய்ப்புகள் கூடி வரும் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். நீங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு யோகம் கிடைக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்கவும். லட்சுமி உடல் நல தொந்தரவை சமாளிக்க மருத்துவரை அணுகவும். சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு நகரும் போது அற்புமான நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சுபிட்சம் அதிகரிக்கும்

சுபிட்சம் அதிகரிக்கும்

சுக்கிரன் மீது அஷ்டம ஸ்தானம் சனி பார்வை இருப்பதால் அலுவலகத்தில் நெருக்கடியை தரும். 24ஆம் தேதி இந்த பிரச்சினைகள் தீரும் காரணம் சுக்கிரன் பெயர்ச்சி கடகத்திற்கு செல்லும் போது நன்மைகள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் நிகழும். இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் ஒழிந்து சுபிட்சமான நிலை ஏற்படும்.

கடவுளை வணங்குங்கள்

கடவுளை வணங்குங்கள்

எட்டாம் வீட்டில் சனியோடு கேது இணைந்திருப்பதால் திருமண ஏற்பாடுகளில் தடைகள் வரும் சுக்கிரன் ராகு உடன் இணைவதால் சிலருக்கு கலப்புத்திருமண யோகம் வரும். ஆனால் பொறுமை அவசியம். சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும். சில காரியத்தடைகளும் உருவாகும். ஆயுள் ஆரோக்கியத்தில் உள்ள குறைகளை கடவுள் போக்குவார். இந்த மாதம் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. சனிக்கிழமை தானம் செய்யுங்கள். குறைகள் நீங்கும். விருப்பமான கடவுளை வணங்குங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+