Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூலை மாத ராசிபலன்கள் 2019: சிம்மம் ராசிக்காரர்களுக்கு லாபங்கள் நிறைந்த மாதம்

ஜூலை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் வேலை, கல்வி, திருமணம் விசயங்கள் எப்படி என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே... இந்த மாதம் உங்கள் ராசி அதிபதி லாப ஸ்தானத்திலும், விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கடல் கடந்து செல்லும் யோகம் கைகூடி வருகிறது. நீங்கள் நினைத்தது நிறைவேறும். செலவுகள் அதிகம் வந்தாலும் சுப செலவுகள்தான் ஏற்படும்.

இந்த மாதம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன், சுக ஸ்தானத்தில் குரு, பஞ்சம ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும், சுக்கிரனும் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு மாறுகின்றனர்.

இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டவேண்டாம். நிதானமாக முடிவுகளை எடுங்கள். திருமணமோ, வேலையோ எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது அவசியம்.

பிரச்சினைகள் தீரும்

பிரச்சினைகள் தீரும்

ஜூலை மாதம் மேன்மை உருவாகும் மாதம் சிம்மத்தின் அதிபதி சூரியன் 17ஆம் தேதி வரை லாபத்தில் ராகு, சுக்கிரன் உடன் சஞ்சரிக்கிறார். சூரியன் புதன் வீட்டில் லாப ஸ்தானத்தில் ராகு உடன் சுக்கிரன் உடன் இணைந்திருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். முதல் 15 நாட்கள் வரை லாபத்தில் இருக்கும் சூரியனால் உயர் பதவிகள் பட்டங்கள் தேடி வரும். புரமோசன் கிடைக்கும். பிரச்சினைகள் சரியாகும். வேலை மாற்றம் பற்றிய தகவல்கள் வரலாம். இடமாற்றங்களும் வரும்.

கவனம் தேவை

கவனம் தேவை

17ஆம் தேதிக்கு மேல் கடகத்திற்கு வந்து செவ்வாய் புதன் உடன் இணைகிறார். விரையத்தில் இருக்கும் சூரியனால் வீடு வாகனங்கள் வாங்க முதலீடுகள் செய்யலாம் ஆனால் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார மேம்பாடு உற்சாகமாக இருக்கும்.

குருவின் பார்வை 12ஆம் வீட்டில் செவ்வாய் புதன் மீது மாத பிற்பகுதியில் இணையும் சூரியன் சுக்கிரன் மீது விழுவதால் கடன்கள் அடைபடும். கடன்கள் அதிகம் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகம் பயன்படும்.

வெளிநாட்டு பயணம்

வெளிநாட்டு பயணம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல விசயங்கள் அதிகம் நடைபெறும். குருவின் பார்வை ராசிக்கு 12ஆம் வீட்டில் விழுவதால் கடல் கடந்து செல்லும் பயணம் அமையும். வெளிநாடு பயணம், தூர தேச பிரயாணத்தினால் வருமானம் அதிகரிக்கும். ஆதாயங்களும் அதிகரிக்கும். இந்த மாதம் சிம்மத்திற்கு லாபங்கள் நிறைந்த மாதம். நினைத்தது நிறைவேறும்.

மாணவர்களுக்கு யோகம்

மாணவர்களுக்கு யோகம்

ஐந்தாம் வீட்டில் சனி கேது சேர்க்கை இருப்பதால் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படும். சனி இந்த மாதம் 5ஆம் இடத்தில் இருப்பதால் சோர்வு குழப்பத்தை ஏற்படுத்துவார். 12ஆம் வீட்டில் புதன் மறைந்திருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த கல்வியைத் தருவார். மாணவர்களுக்கு நினைத்த படிப்பு படிக்க காலம் கணிந்து வருகிறது. உயர்கல்வி யோகம் கூடி வருது. அசாத்திய திறமைகள் வெளிப்படும். மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நல்ல வாய்ப்பு அமையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

வண்டி வாகன சேர்க்கை

வண்டி வாகன சேர்க்கை

வீடு, நிலம் வாங்குபவர்கள் அவசரப்பட்டு பணத்தில் முதலீடு செய்ய வேண்டாம். கார் வாங்குபவர்களுக்கு இது யோகமான காலம். வண்டி வாகனம் வாங்கலாம். மாத பிற்பகுதியில் மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். பெண்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்.

குழந்தைகள் நலனில் அக்கறை

குழந்தைகள் நலனில் அக்கறை

உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் கவனம் தேவை. குழந்தைகளின் நண்பர்களையும் கண்காணியுங்கள். தீய பழக்கவழக்கம், கூடா நட்பினால் உங்கள் பிள்ளைகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பொருளாதார லாபம் அமையும். பிரச்சினைகள் சரியாகும். கடக ராசியில் சந்திரன் வீட்டில் சூரியன் மாறும் கால கட்டத்தில் செலவுகள் வந்தாலும் குருவின் பார்வை இருப்பதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்

சுப செலவுகள்

சுப செலவுகள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விரைய ஸ்தானத்தில் 4 கிரகங்கள் இணையும் காலத்தில் பணம் விரையங்கள் வரும். குரு பார்வை இருப்பதால் சுப செலவுகளாக மாற்றுங்கள். நிதானம் தேவை. தவறான முடிவுகளை எடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். திருமணம், வேலை விசயங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். கவனமும் எச்சரிக்கையும் தேவை. சிவ ஆலயங்களில் ஞாயிறு கிழமைகளில் செந்தாமரை சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+