ஜூன் மாத ராசி பலன் 2023: வெற்றி மீது வெற்றி என்னை வந்து சேரும்..குதூகலமடையும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: ஜூன் மாதத்தில் நவ கிரகங்களின் பயணம் சிலருக்கு சாதகமாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு சோதனைகளைத் தரும்.
ஜூன் மாதம் வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்வார்கள். குரு, ராகு மேஷத்திலும், ரிஷபத்தில் புதன் சூரியன், கடகத்தில் செவ்வாய் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கப்போகும் அற்புதமான மாதம் ஜூன் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் பயணம் பார்வையால் கடகம் மற்றும் சிம்மம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கடகம்: உங்கள் ராசியில் செவ்வாய் சுக்கிரன் இணைந்து மாதம் முழுவதும் பயணம் செய்வதால் சுக போகமான வாழ்க்கை அமையும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குருவும் ராகுவும் இணைந்திருப்பதால் நன்மைகள் உண்டாகும். விபரீத ராஜயோக காலம் உண்டாகும். சனியின் பார்வையும் தொழில் ஸ்தானத்தில் விழுவதால் புது வேலையும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். லாப ஸ்தானத்தில் புதன் பயணம் செய்வதால் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் கைகூடும். தொழில் வியாபாரத்தில் திடீர் மாற்றம் உண்டாகும்.
சனிபகவான் வக்ரமடைவதால் இந்த மாதத்தில் திருமணம் தொடர்பாக பேசி முடிக்க அவசரப்படாதீர்கள். வரன் பேசும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். கணவன் மனைவி இடையே புரிதல் இல்லாமல் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். உறவுகளால் தொந்தரவுகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு இந்த வக்ர சனி காலத்தில் வெற்றிகள் தேடி வரும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மாத பிற்பகுதிகளில் புதிய முயற்சிகளை செய்யத் தொடங்குங்கள் வெற்றிகள் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். மன அமைதியும் நிம்மதியும் வரும். சனி பார்வையும், குரு பார்வையும் உங்களின் குடும்ப, வாக்கு ஸ்தானத்தின் மீது விழுவதால் சுகங்களும் சந்தோஷமும் அதிகரிக்கும். மொத்தத்தில் கடக ராசிக்காரர்கள் விழிப்புணர்வோடு கவனத்தோடு இருக்க வேண்டும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைந்துள்ளன. சனி ஏழாம் வீட்டில் வக்ரமடைகிறார். சனி பகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். புதனும் கூடவே பயணம் செய்யப்போகிறார். வேலையில் புதிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை. விரைய ஸ்தான சுக்கிரன் எதையாவது சுப விரைய செலவுகளை கொடுத்து வருவார் எனவே கவனமாக இருப்பது நல்லது. வேலைக்காக புதிய முயற்சிகள் எதுவும் தேவையில்லை. இருக்கிற வேலையே திருப்தியாக இருக்கும்.
குரு பார்வை, சனி பார்வை கிடைத்தாலும் திருமண சுப காரியகள் நடைபெறுவதில் சில தடைகள் வந்து கொண்டே இருக்கும். செவ்வாய், சுக்கிரன் 12ஆம் வீட்டில் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை கொடுக்கும். எதையும் திட்டமிட்டு முடிவு செய்யுங்கள். திருமணம் நடந்தவர்களுக்கு குடும்பத்தில் சில குழப்பங்களும் கோபங்களும் வந்து நீங்கும். வேலை விசயமாக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். காதலிப்பவர்கள் கவனத்தோடு பேசுங்கள். உங்களின் பேச்சே பிரிவை ஏற்படுத்தி விடும்.
புதன் பகவான் பயணம் மாணவர்களுக்கு கல்வியில் உற்சாகத்தை தரும். கல்விக்காக நிறைய செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரணம் கண்டக சனி காலம் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. சளி காய்ச்சல் தொந்தரவுகள் வந்து நீங்கும். பெண்களுக்கு இந்த மாதத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுமைகள் அதிகரித்தாலும் குடும்பத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். இல்லத்தரசிகளுக்கு உடல் அசதி வந்து நீங்கும். பொருளாதார நிலையில் கவனம் தேவை. சொத்து வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை கவனித்து வாங்குவது நல்லது. எதையும் எச்சரிக்கையோடு அணுகுவது நல்லது.












Click it and Unblock the Notifications